காந்தருவ தத்தையார் இலம்பகம் |
286 |
|
சீதத்தனுக்கு முகமன் பல மொழிந்து தன் முன்னோர்க்கும் அவன் முன்னோர்க்குமிருந்த கேண்மையை எடுத்துக்காட்டி நட்புக் கொண்டான். பின்னர்க் காந்தருவ தத்தையின் வரலாறு கூறி, அவளை வீணாபதி என்னும் தோழியோடு சீதத்தன் பால் ஒம்படை செய்தனன். பின்னரும் பொருள் பல அளித்து ”நண்பனே! இவள் இன்றுதொட்டு நின் மகளேயாவாள், இவளை நீ நின் ஊர்க்கு அழைத்துச் செல்க! ஆண்டு, இவளை யாழ்ப் போரில் வெல்வானொரு காளைக்குக் கடிமணம் செய்விப்பாயாக!” என்று கூறி விடுத்தனன்.
|
|
சீதத்தன் அவளோடும், பரிசனங்களொடும் வானவூர்தியிற் புறப்பட்டு வரும்பொழுது தரன் முன்னர்த் தன் வித்தையால் மறைத்திருந்த மரக்கலம் முதலியவற்றை ஊறின்றிக் காட்டக் கண்டு, உவகை மிக்கு அவற்றோடு இராசமாபுரமெய்திக் காந்தருவ தத்தையைத் தன் மனையோள் பதுமைக்குக் காட்டி நிகழ்ந்தனவும் உணர்த்தினன். காந்தருவ தத்தையைக் கன்னிமாடத்திற் சேர்த்தினன். கட்டியங்காரன் உடன்பாடு பெற்றுக் காந்தருவ தத்தையை யாழில் வென்றோன் அவட்குக் கணவனாதற்குரியன் என்னும் செய்தியையும், யாழ்ப் போர்க்கு உரிய நன்னாளையும் நகரமெங்கும் முரசறைவித்துணர்த்தினன்.
|
|
பின்னர்ச் சீதத்தன் காந்தருவ தத்தையுடன் யாழ்ப் போர் செய்தற்கு வேண்டுவன வெல்லாமியற்றினன். பல நாட்டு மன்னரும் அவ்விடத்தே வந்து குழுமினர். நன்னாளிலே காந்தருவதத்தை யாழரங்கமேறித் தனது தெய்வ யாழின் சிறப்புத் தோன்ற வாசித்தாள். மன்னரும் பிறரும் அவ் விசைகேட்டு மெய்ம்மறந்தனர். பின்னர், மன்னர் முதலியோர் தனித்தனியே தத்தையொடு யாழியக்கித் தோற்றனர். ஆறு நாட்கள் யாழ்ப்போர் நிகழ்ந்தது; காந்தருவ தத்தையை வெல்வார் யாருமிலராயினர்.
|
|
இச் செய்தியறிந்த சீவகன், காந்தருவ தத்தையொடு யாழ்ப்போர் செய்தற்கெண்ணினன். அக் கருத்தைத் தந்தை கந்துக்கடனுக் குணர்த்தி விடைவேண்டி நின்றனன். அது கேட்ட கந்துக்கடன் அங்கமாலை என்னும் பரத்தையின் பொருட்டுக் கட்டியங்காரன் சீவகன்பால் உட்பகை கொண்டுள்ளான் என்பதனை நாகமாலை என்பவளால் அறிந்திருந்தமையால், ”நன்று மைந்த நீ அங்குச் செல்லுங்கால் படையமைத்து விழிப்புடன் செல்க!” என்று கூறினன்.
|
|
சீவகன் அவ்வாறே சென்று காந்தருவ தத்தையோடு யாழ்ப்போர் செய்து அவளை வென்றனன். காந்தருவ தத்தையும் உள
|
|