பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 287 

   மகிழ்ந்து சீவகன் திண்டோளில் மாலையிட்டனள். இந் நிகழ்ச்சியால் கட்டியங்காரன் நெஞ்சம் புழுங்கினான். முன்னரே தத்தைக்குத் தோற்றிருந்த மன்னர் மக்கள் பொறாமைத் தீயைத் தன் சொல்லாகிய நெய்யாலே பெரிதும் வளர்த்தான். ”சீவகனைப் படைக்கலப் போரில் வென்றோனே தத்தைக்குக் கணவன் ஆகும் உரிமையுடையோன்! எழுக! போரிடுக!” என்று தூண்டினன். அவன் சொற்கேட்ட மன்னரெல்லாம் ஒருங்கே திரண்டு சீவகனுடன் போராற்றினர். ஒருங்கே தோற்றொழிந்தனர். பின்னர்ச் சீவகன் காந்தருவ தத்தையைத் தன் மனைக்கு அழைத்துக் கொணர்ந்து நன்னாளிலே திருமணம் புரிந்து கொண்டு அந் நங்கையொடு கூடிப் பெரிதும் இன்புற்றிருந்தனன்.

 
493 இங்கிவர்க ளிவ்வா றிருந்தினிது வாழச்
சங்குதரு நீணிதியஞ் சாலவுடை நாய்கன்
பொங்குதிரை மீது பொரு மால்களிறு போன்றோர்
வங்கமொடு போகிநிதி வந்துதர லுற்றான்

   (இ - ள்.) இவர்கள் இங்கு இவ்வாறு இருந்து இனிது வாழ-சீவகன் முதலானோர் இராசமாபுரத்தில் இங்ஙனம் இருந்து இனிதாக வாழ்கையில்: (இனி வேறொரு நிகழ்ச்சி கூறுவேன் ) சங்குதரு நீள் நிதியம் சால உடை நாய்கன் - சங்கு என்னும் எண்ணிக்கை பொருந்திய மிகுந்த செல்வத்தை அறவே இழந்த சீதத்தன் என்னும் வணிகன்; பொங்குதிரை மீது பொரும்மால் களிறு போன்று - பொங்கும் அலைகடலிலே கடலொடு பொருகின்ற பெரிய களிறுபோல; ஓர் வங்கமொடு போகி வந்து - ஒரு கப்பலுடன் சென்று திரும்பும் தொழிலிலே; நிதி தரல் உற்றான் - செல்வம் ஈட்டத் தொடங்கினான்.

 

   (வி - ம்.) வாழ : நிகழ்கால வினையெச்சம். 'நிதிதரல் உற்றான்' என்பது சீதத்தனுடைய வாழ்க்கை நடைபெறும் முறை கூறியவாறு. இங்ஙன மின்றிப் பதுமுகன் திருமண நிகழ்ச்சிக்குப் பிறகு, சீதத்தன் வணிகத்திற்குச் சென்றான் எனில், சென்ற தீவிலே அவன், அணங்கனாரோ டறுமதி கழிந்தபின்னர்; காந்தருவ தத்தையை இராசமாபுரத்திற்கு அழைத்து வரற்கும் சீவகன் அவளை மணந்து, பின்னர் ஏழுதிங்கள் கழித்துத் தன், பகை முடித்தற்கும் காலமின்றாம்.

 

   இது பற்றியே நச்சினார்க்கினியர், 'வாழ' என்பதை, 'மட்டவிழ் கோதையோடே மனையகம் புகுந்தான்' என்பதனொடு 'கட்டழல்' (583) என்னுஞ் செய்யுளிற் கொண்டு முடிப்பர்.

 

அவர் கூறுவது :

 

   இவ்விடத்தே பிள்ளையாரும் சுற்றமும் இருந்து இனிதாக வாழா நிற்க, நாய்கன் பரிவு தீர்ந்து மட்டவிழ் கோதையோடே மனையிலே மகிழ்ந்து புக்கான் எனக் கூட்டி, 'கட்டழல்' (சீவக. 583) என்னுங்