பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 288 

கவியளவும் ஒரு தொடராக்குக. இதற்குக் காரணம் என்னையோவெனின், ஆசிரியன், 'ஆண்டுநேரெல்லை' (சீவக. 393) என்று கூறிய பின்பு, சுதஞ்சணனும் 'பன்னிரு மதியின்' (சீவக. 1220) என்றும், 'ஆறிரு மதியின்' (சீவக. 1221) என்றும் கூறினமையால், ஆசிரியன் முந்நூற்றறுபத்தைந்து நாள் ஓரியாண்டான சௌரமான பட்சம் பற்றிக் கூறினானென்றும், தேவன், 'மதியின்' என்று மதியைக் கூறினமையின், சாந்திரமான பட்சம் பற்றிக் கூறினானென்று முணர்க. எனவே, ஆசிரியன், 'யாண்டு' என்றது முந்நூற்றறுபத்தைந்து நாளாதலானும், தேவன், ' பன்னிருமதியின்' என்றது, மாசித் திங்களிற் றோன்றிய பங்குனிப் பிறை முதலாக மேல் வருகின்ற மாசியிற் பங்குனிப் பிறையளவும் பன்னிரு மதியாமாதலானும், இருவரும் இரண்டு திங்களிற் கூறினாரேனும் ஓரியாண் டென்பது பெற்றாம், சௌரமான பட்சத்தாலே ஐந்து நாள் ஏறுகின்றதாதலின், ஆசிரியன் கூறியது அம் மாசியில் உவாவின் முன் கழிந்த தசமியிலெனக் கொள்க. இது, 'நானக்கிடங்கு' என்னும் (சீவக. 590) கவியானும் உணர்க. மாத் திங்களின் ஆறாந்தேதி அமாவாசை முதல், பங்குனித் திங்களில் ஐந்தாந் தேதி வரை சாந்திரமான பட்சத்தாற் பங்குனியாகையாலே, மண்டபம் எடுத்தலும் விவாகங்களும் உரியவாயின. இவ்விடத்திற் சௌரமான பட்சத்தால் மாசித் திங்கள் கொள்ளார், சாந்திரமான பட்சம் சிறந்ததாகலின், இங்ஙனம் இருவரும் ஆண்டுக் கூறுகின்ற நாளிடையில் நடந்த சரிதமாகிய நிரை மீட்டலும், தத்தையையும் குணமாலையையும் வரைதலும், சிறைவிடுதலும் நிகழ்ந்தன மாசியிலும் பங்குனியிலே சிறிது நாளிலும் என்பது உணர்தற்கு மேலே, 'பங்குனிப் பருவஞ் செய்தான்' (சீவக. 851) என்றார். மேலே தோழர், பிள்ளையார்க்குத் தத்தையது ஓலை கொடுத்ததிலே, 'ஐந்து மதி யெல்லையினை யாண்டுடைய னாகி' (சீவக. 1875) எனவே, இவ்வோலை எழுதுவதற்கு முன்னே ஏழுதிங்கள் சென்றனவென்றாராதலின், இராசமபுரத்தே முப்பத்தைந்து நாளும். 'இங்ஙன மிரண்டு திங்க ளேகலும்' (சீவக. 1359) என்றும், 'கழிந்தன இரண்டு திங்கள்' (சீவக.1496) என்றும் கூறுதலால், பதுமையாரிடத்தும் கேமசரியாரிடத்தும் பங்குனி முதலாக நான்கு திங்களும், இவ்வோலை எழுதுவதற்கு முன்னே கனகமாலையாரிடத்து இரண்டு திங்களும் ஆக ஏழு திங்களும் சென்றனவென்று தேவர் திங்களைப் பகுத்துக் கூறுதலின், ஈண்டு சீதத்தனுக்கு, 'அணங்கனாரோ டறுமதி கழிந்த பின்றை' (சீவக. 505) என்றல் பொருந்தா தென்பது பற்றி, முன் நிகழ்ந்ததொரு கதை தேவர் கூறுகின்றாரென்றே பொருளுரைத்தல் வேண்டிற்றென்று கொள்க.

 

   உடை நாய்கன் : வினைத்தொகை. 'கலத்தினுங் காலினுந் தருவனரீட்டக் - குலத்திற் குன்றாக் கொழுங்குடிச் செல்வர்' (சிலப். 2 : 7-8) என்று இளங்கோவடிகளுங் கூறினமையின், பொருளுடையவன் தான் இருந்து பொருள் தேடுதலும் பொருளில்லாதவன் கலத்திற்சென்று பொருள் தேடுதலும் வேண்டுதலின், இவனையும், 'ஓர்வங்க மொடு' என்றும், 'ஊனமெனுமின்றி யினிதோடுக விதென்றான்' (சீவக. 500) என்றும் தேவர் கூறினமையின், பொருளின்றித்தான் செல்கின்றானென்றுணர்க.

 

   இது முதல் ஆறு செய்யுட்கள் ஒரு தொடர்.

 

   இவர்கள் என்றது சீவகன் பதுமுகன் முதலியோரை. சங்கு-ஒரு பேரெண். சங்கமென்னும் இலக்கத்தை மேன்மேலே தருகின்ற பெரிய