காந்தருவ தத்தையார் இலம்பகம் |
290 |
|
கின்றன. கம்மியர் - பிறருக்குத் தொழில் செய்வோர். கம்மியரும்; உம் : இழிவு சிறப்பு. அம்மி மிதத்தலும் சுரை ஆழலும் உயர்ந்தோர் தாழ்வதையும் தாழ்ந்தோர் உயர்வதையுங் குறிக்கும். 'சுரை ஆழ அம்மி மிதப்ப' (பழ.125) என்றார் பிறரும்.
|
|
|
”இம்மி - மத்தங்காய்ப் புல்லரிசி; குறைந்ததோர் எண்ணுமாம்” |
|
என்பர் நச்சினார்க்கினியர். இச் செய்யுட் கருத்தோடு,
|
|
|
”ஆடுகோ டாகி அதரிடை நின்றதூஉங் |
|
|
காழ்கொண்ட கண்ணே களிறணைக்குங் கந்தாகும் |
|
|
வாழ்தலு மன்ன தகைத்தே யொருவன்றான் |
|
|
தாழ்வின்றித் தன்னைச் செயின்.”(நாலடி. 192) |
|
என வரும் நாலடியையும் நினைக.
|
( 3 ) |
496 |
உள்ளமுடை யான்முயற்சி செய்யவொரு நாளே |
|
வெள்ளநிதி வீழும்விளை யாததலி னில்லை |
|
தொள்ளையுணர் வின்னவர்கள் சொல்லின்மடி கிற்பி |
|
னௌ்ளுநர்கட் கேக்கழுத்தம் போல வினிதன்றே. |
|
(இ - ள்.) உள்ளம் உடையான் முயற்சி செய்ய ஒரு நாளே வெள்ளம் நிதி வீழும் - முயலும் உள்ளம் உடையவன் முயற்சி செய்தால், ஒரு நாளிலே வெள்ளம் என்னும் எண்ணையுடைய செல்வம் திரளும்; அதனின் விளையாது இல்லை - முயற்சியினால் விளையாதது எதுவும் இல்லை; தொள்ளை உணர்வினவர்கள் சொல்லின் மடிகிற்பின் - அறிவு கெட்டவர்கள் சொல்லை எண்ணிச் சோம்பியிருப்பின்; எள்ளுநர்கட்கு ஏக்கழுத்தம் போல இனிது - நம்மை யிகழ்பவர்க்கு ஒரு தலை நிமிர்வை யுண்டாக்கினாற் போல இனியதாயிருக்கும்.
|
|
(வி - ம்.) உள்ளம் - ஊக்கம். செய்ய; எதிர்கால வினையெச்சம். வெள்ளம் : ஒரு பேரெண். தொள்ளை யுணர்வு - ஓட்டையறிவு; அறிவின்மை. அவர்கள் சொல்வது: 'வருவது தானே வரும்' 'கொடுக்கும் தெய்வம் கூரையைப் பிரித்துக் கொட்டும்' என்பன போன்ற சோம்பல் வளர்க்கும் மொழி. 'ஏ பெற்றாகும்' (தொல். உரி.) என்றதனால் ஏக்கழுத்தம் - தலையெடுப்பு. இது முயற்சி்யின் சிறப்பைக் கூறுவதால் நல்வினையால் ஒரு நாளிலே 'வெள்ளநிதி வீழும்' என்பது
|
|
பொருந்தாது. அன்று ஏ : அசைகள்.
|
( 4 ) |
497 |
செய்க பொருள் யாருஞ்செறு வாரைச்செறு கிற்கு |
|
மெஃகுபிறி தில்லையிருந் தேயுயிரு முண்ணு |
|
மையமிலை யின்பமற னோடெவையு மாக்கும் |
|
பொய்யில்பொரு ளேபொருண்மற் றல்லபிற பொருளே. |
|
(இ - ள்.) யாரும் பொருள் செய்க - எத்தகையோரும் செல்வதைத் தேடுக; செறுவாரைச் செறுகிற்கும் எஃகு
|
|