காந்தருவ தத்தையார் இலம்பகம் |
291 |
|
பிறிது இல்லை - பகைவரை வெல்லும் வேல் அதனிற் பிறிதொன்று இல்லை; இருந்தே உயிரும் உண்ணும் - பவைகவரிடமே இருப்பினும் பகைவருயிரை உண்ணத் துணைபுரியும்; இன்பம் அறனொடு எவையும் ஆக்கும் - பொருளானது முற்கூறியவற்றை ஆக்குவதுடன் இன்பத்தையும் அறத்தையும் வளர்க்கும்; ஐயம் இலை - இங்குக் கூறியதிற் சிறிதும் ஐயம் இராது. பொய்யில் பொருளே பொருள் - முயற்சியாற் கிடைக்கும் அவ்வுண்மைப் பொருளே பொருளாகும்; பிற பொருள் அல்ல - வேறு வழியில் வரும் பொருள்கள் பொருளாகா.
|
|
(வி - ம்.) மற்று : அசைநிலை. எஃகு : பொதுவாகப் படைகளைக் குறிப்பினும் வேலே சிறந்த படையாதலால் வேலெனப்பட்டது.
|
|
|
யாரும் பொருள் செய்க என மாறுக. இச் செய்யுட் கருத்தோடு, |
|
|
”செய்க பொருளைச் செறுநர் செருக்கறுக்கும் |
|
|
எஃகதனிற் கூரிய தில்.”(குறள். 759) |
|
எனவும்,
|
|
|
”ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க் கெண்பொருள் |
|
|
ஏனை யிரண்டு மொருக்கு.”(குறள் 760) |
|
எனவும்,
|
|
|
”பொருளல் லவரைப் பெருளாகச் செய்யும் |
|
|
பொருளல்ல தில்லை பொருள்.” (குறள். 751) |
|
எனவும், எழுந்த திருக்குறள்களை ஒப்பிடுக.
|
|
இனி இருந்தே உயிரும் உண்ணும் என்பதற்குப் பொருள் தன்னையுடையோன் தன்னிடத்தே இருக்கவே சேய்மையிலுள்ள அவன் பகைவருயிரையும் தான் அவர்பாற் சென்றுண்ணும் எனக் கோடலுமாம்.
|
( 5 ) |
498 |
தூங்குசிறை வாவலுறை தொன்மரங்க ளென்ன |
|
வோங்குகுல நையவத னுட்பிறந்த வீரர் |
|
தாங்கல்கட னாகுந்தலை சாய்க்கவரு தீச்சொ |
|
னீங்கல்மட வார்கள்கட னென்றெழுந்து போந்தான் |
|
(இ - ள்.) தூங்கு சிறை வாவல் உறை தொல்மரங்கள் என்ன - தொங்குகின்ற, சிறகினையுடைய வெளவால்கள் வாழும் ஆலமரங்கள் (தாம் நையினும் அவற்றின் விழுதுகள் அவற்றைத் தாங்கினாற்) போல; ஓங்கு குலம் நைய - மேம்பட்ட மரபு வருந்தியபோது; அதனுள் பிறந்த வீரர் தலைசாய்க்கவரு தீச்சொல் தாங்கல் கடன் ஆகும் - அம்மரபிலே பிறந்த வீரர்கள் தாந் தலைகுனிதற்குக் காரணமான பழிச்சொல் தோன்றுதற்கு முன்னே அதனைத் தளராமல் காப்பாற்றுவது கடனாகும்;
|
|