காந்தருவ தத்தையார் இலம்பகம் |
295 |
|
504 |
தீவினுள் இழிந்து தேந்தார்ச் செம்மலுந் திருமுத்தாரங் |
|
கோவினைக் குறிப்பிற் கண்டு கொடுத்தருள் சுமந்து செம்பொற் |
|
பூவினுள் ளவளை யன்ன பொங்கிள முலையினார்த |
|
நாவினு ளமிர்தங் கேட்டு நாடக நயந்து சின்னாள் |
|
(இ - ள்.) தீவினுள் இழிந்து - தீவை அடைந்து; தேன்தார்ச் செம்மலும் - தேன் பொருந்திய மாலையணிந்த சீதத்தனும் ; கோவினைக் குறிப்பின் கண்டு - அத்தீவக வேந்தனை அவன் குறிப்பறிந்து கண்டு; திரு முத்து ஆரம் கொடுத்து - அழகிய முத்து வடத்தைக் காணிக்கையாக நல்கி; அருள் சுமந்து - அவனருளையேற்று; செம்பொன் பூவின் உள்ளவளை அன்ன பொங்கு இளமுலையினார் தம் - சிவந்த பொற்றாமரை மலரில் வாழும் திருமகளைப் போன்ற பூரிக்கும் இளமுலை மகளிருடைய; நாவினுள் அமிர்தம் கேட்டு நாடகம் நயந்து - நாவில் விளையும் அமிர்தமனைய இசையைக் கேட்டும் நாடகத்தை விரும்பிக் கண்டும்; சின்னாள் - சில நாட்கள் கழித்து,
|
|
(வி - ம்.) 'திருமுத்து ஆரம்' என்பதற்குத், 'திருமகள் சேரும் ஆரம்' என்றும், 'திருவினையும் முத்தாரத்தையும்' எனவும் பொருள் கூறலாம் என்பர் நச்சினார்க்கினியர்.
|
|
இப் பாட்டுக் குளகம். இது முதல் 'ஆடகம்' (560) வரை ஒரு தொடர்.
|
|
பூவினுள்ளவள் - திருமகள். நாவினுள் அமிர்தம் என்றது இன்னிசையை. இசையென்பது தோன்ற 'கேட்டும்' என்றார். நாடகத்தை நயந்து கண்டு என்க.
|
( 12 ) |
505 |
புணர்ந்தவர் பிரித லாற்றாப் |
|
போகமீன் றளிக்குஞ் சாய |
|
லணங்கினுக் கணங்க னாரோ |
|
டறுமதி கழிந்த பின்றைக் |
|
கொணர்ந்தன பண்டம் விற்ற |
|
கொழுநிதிக் குப்பை யெல்லா |
|
முணர்ந்துதன் மதலை யேற்றி |
|
யொருப்படுத் தூர்க்கு மீள்வான் |
|
(இ - ள்.) புணர்ந்தவர் பிரிதல் ஆற்றா - கூடியவர் பிரியவியலாமல்; போகம் ஈன்று அளிக்கும் சாயல் - இன்பத்தைக் கொடுத்து ஆதரவு செய்யும் மென்மையினையுடைய; அணங்கினுக்கு அணங்கனாரோடு - தெய்வங்கட்குத் தெய்வம் போன்ற வரோடு; அறுமதி கழிந்த பின்றை - ஆறு திங்கள் கழித்த
|
|