| காந்தருவ தத்தையார் இலம்பகம் |
296 |
|
|
பிறகு; கொணர்ந்தன பண்டம் விற்ற கொழுநிதிக் குப்பையெல்லாம் - கொண்டுவந்த பொருள்களை விற்ற வளமிகு செல்வக்குவியலை யெல்லாம்; உணர்ந்து தன் மதலை ஏற்றி - அறிந்து தன் கலத்தில் ஏற்றி; ஒருப்படுத்து ஊர்க்கு மீள்வான் - ஒருவழிப்படுத்தித் தன் ஊருக்குத் திரும்புவானாகி,
|
|
|
(வி - ம்.) கொணர்ந்தன; வினைமுற்றுப் பெயரெச்சமாகியது, 'எல்லாம் உணர்ந்து' என்றார், சரக்கின் பெருமையால் உணரவறிதாகலின். ஆற்றா : ஈறுகெட்ட எதிர்மறை வினையெச்சம். இப் பாட்டுங்குளகம்.
|
( 13 ) |
| 506 |
அரசனைக் கண்டு கண்ணுற் |
| |
றவர்களை விடுத்து நன்னா |
| |
ளிரைவதி வியாழ வோரை |
| |
யிருஞ்சிலை முளைப்ப வேறிக் |
| |
கரைகட லழுவ நீந்திக் |
| |
காற்றினுங் கடுகி யைஞ்ஞூ |
| |
றுரையுடைக் காத மோடி |
| |
யோசனை யெல்லை சார்ந்தே, |
|
|
(இ - ள்.) அரசனைக் கண்டு - (மீண்டு) அரசனைப் பார்த்து (விடைபெற்று); கண்ணுற்றவர்களை விடுத்து - மிக நெருங்கிப் பழகியவர்களை (அரிதின்) நீங்கி; நல்நாள் இரைவதி வியாழ ஓரை இருஞ் சிலை முளைப்ப ஏறி - நல்ல நாளாகிய இரேவதி நாளில் வியாழ ஓரையில் தனு தோன்றும்போது மரக்கலம் ஏற; கரைகடல் அழுவம் நீந்திக் காற்றினும் கடுகி - அம்மரக்கலம் ஒலிங்குங் கடலின் பரப்பிலே நீந்திக் காற்றினும் விரைந்து; ஐஞ்ஞூறு உரையுடைக் காதம் ஓடி - ஐஞ்ஞூறெனக் கூறப்படுங் காத எல்லையைக் கடந்து ஓடி; ஓசனை எல்லை சார்ந்து - தான் செல்லுங் கரை ஓர் ஓசனை யளவிலே இருக்குமாறு நெருங்க,
|
|
|
(வி - ம்.) இதுவுங் குளகம். ஏறி - ஏற: வினையெச்சத்திரிபு. சார்ந்து - சார: இதுவும் வினையெச்சத்திரிபு. இனி இரண்டெச்சத்தையுந் திரிக்காமல் மரக்கலத்தின் மீது வருபவரின் தொழிலாக்கினும் பொருந்தும், 'மரக்கலம் ஓடினான்' என்றாற்போல.
|
|
|
அரசன் - அத் தீவினுக்கு மன்னன். கண்ணுற்றவர்-பழகியவர்; நண்பர் என்க. நன்னாளாகிய இரேவதி என்க. இரேவதி எதுகை நோக்கி இரைவதி என்றாயிற்று. சிலை- தநுராசி. வியாழக்கோளையுடையதாய்த் தனுவோரை தோன்ற என்க. அழுவம் - பரப்பு. கரை கடல்: வினைத்தொகை.
|
( 14 ) |