பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 297 

507 களித்தலை மயங்கி யிப்பா
  லிருத்தலுங் கலந்தோர் காற்றிற்
றுளித்தலை முகில்க ளீண்டித்
  தூங்கிருண் மயங்கி மான்று
விளிப்பது போல மின்னி
  வெடிபட முழங்கிக் கூற்று
மொளித்துலைந் தொழிய வெம்பி
  யுரறிநின் றிடிப்ப நாய்கன்.

   (இ - ள்.) இப்பால் களித்தலை மயங்கி இருத்தலும் - இங்கு இவர்கள் களிப்பிலே தம்மை மறந்து இருக்கும்போது; ஓர் காற்றில் துளித்தலை முகில்கள் கலந்து ஈண்டி - ஒரு காற்றிலே நீர்த் துளியை யுடைய கரிய முகில்கள் பரவிச் செறிந்து: தூங்கு இருள் மயங்கி மான்று - பேரிருள் போன்று எத்திசையினுங் கலந்து மயங்கி; விளிப்பது போல மின்னி - கெடுப்பது போல மின்னி; வெடிபட முழங்கி - வெடிப்பது போலச் சிறிது இடித்து; கூற்றும் ஒளித்து உலைந்து ஒழிய வெம்பி உரறி நின்று இடிப்ப - (பிறகு) கூற்றுவனும் மறைந்து வருந்தி ஒழியுமாறு வெதும்பி முழங்கி நிலையாக இடிக்க; நாய்கன் - (இந்நிலை கண்ட) நாய்கன்,

 

   (வி - ம்.) முதலிற் சிறிதே இடித்தது; பிறகு பேரிடி யிடித்தது. இதுவுங் குளகம்.

 

   களித்தலை என்புழி தலை ஏழனுருபு. துளித்து அலையும் முகில் எனினுமாம். மயங்கி - கலந்து. மான்று - மயங்கி. விளித்தல் - கெடுத்தல். கூற்றும், உம்மை உயர்வு சிறப்பு. உரறி - முழங்கி; யுரறி இடிப்ப என்றது முழங்கி இடிப்ப என்றவாறு.

( 15 )
508 எண்டிசை வளியு மீண்டி
  யெதிரெதிர் கலாவிப் பவ்வங்
கொண்டுமே லெழுவ தொப்பக்
  குளிறிநின் றதிர்ந்து மேகந்
தண்டுளி பளிக்குக் கோல்போற்
  றாரையாய்ச் சொரிந்து தெய்வங்
கொண்டதோர் செற்றம் போலுங்
  குலுங்கன்மி னென்று கூறும்.

   (இ - ள்.) எண் திசை வளியும் ஈண்டி - எட்டுத்திசையிற் காற்றும் ஒருங்கே கூடி; எதிர் எதிர் கலாவி - எதிரெதிராகக் கலந்து; பவ்வம் கொண்டு மேல் எழுவது ஒப்ப - கடலைக்கொண்டு மேலே யெழும் ஊழி யிறுதியை ஒவ்வி நிற்க; மேகம் குளிறி