காந்தருவ தத்தையார் இலம்பகம் |
298 |
|
நின்று அதிர்ந்து - முகில் குமுறி நின்று முழங்கி; தண்துளி பளிக்குக் கோல்போல் தாரையாய்ச். சொரிந்து - குளிர்ந்த நீர்த் துளியைப் பளிங்கின் கோலைப் போலத் தாரையாய்ச் சொரிய; தெய்வம் கொண்டதோர் செற்றம் போலும் - தெய்வம் கொண்டதொரு சினம் போலும்; குலுங்கன்மின் என்று கூறும் - இதற்கு நீங்கள் நடுங்காதீர்கள் என்று மேலும் கூறுவான்.
|
|
(வி - ம்.) சொரிந்து - சொரிய : வினையெச்சத்திரிபு. போலும்: உரையசை.
|
|
வளி - காற்று. கலாவி - கலந்து. பவ்வம் - கடல். குளிறி - குமுறி. பளிக்குக்கோல் வேற்றுமையில் மென்றொடர் வன்றொடராயிற்று. சொரிந்தென்னும் எச்சத்தைச் செயவெனெச்சமாகக் கொள்க. குலுங்குதல் - அச்சத்தால் உடல் நடுங்குதல்.
|
( 16 ) |
509 |
இடுக்கண்வந் துற்ற காலை |
|
யெரிகின்ற விளக்குப் போல |
|
நடுக்கமொன் றானு மின்றி |
|
நகுகதா நக்க போழ்தவ் |
|
விடுக்கணை யரியு மெஃகா |
|
மிருந்தழு தியாவ ருய்ந்தார் |
|
வடுப்படுத் தென்னை யாண்மை |
|
வருபவந் துறங்க ளன்றே. |
|
(இ - ள்.) இடுக்கண் வந்து உற்ற காலை - துன்பம் வந்து கூடியபோது; எரிகின்ற விளக்கு போல நடுக்கம் ஒன்றானும் இன்றித் தாம் நகுக - எரியும் விளக்குக் காற்றால் நடுங்குவது போல நடுங்கும் நடுக்கம் எவ்வாற்றானும் இல்லாமல் துன்புற்றார் மகிழ்க; நக்க போழ்து அவ் இடுக்கணை அரியும் எஃகாம் - மகிழ்ந்தால் அஃது அத் துன்பத்தைப் பிளக்கும் படையாகும்; இருந்து அழுது யாவர் உயர்ந்தார் - அத் துன்பத்தை யெண்ணி அமர்ந்து துக்கமுற்று எவர்தாம் அத்துக்கத்தினின்றும் நீங்கினார்?; ஆண்மை வடுப்படுத்து என்னை? - வீரத்தை வடுப்படுத்தி வரம் பயன் என்னை? வருபவந்து உறும் - வரத்தக்கவை வந்து சேரும்.
|
|
(வி - ம்.) உறுங்கள்: கள் : அசை. அன்று, ஏ : அசைகள். 'வடுப்படுத்து என்னை ஆண்மை' என்பதனை அடுத்த செய்யுளின் இறுதியிற் கொண்டு சேர்ப்பர் நச்சினார்க்கினியர்.
|
|
|
'இடுக்கண் வருங்கால் நகுக அதனை |
|
|
அடுத்தூர்வ தஃதொப்ப தில்.' (குறள். 621) |
|
என்பர் வள்ளுவர்.
|
|