பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 299 

அந் நகுதல் எஃகாம் என்க. துன்பத்தைக் கண்டஞ்சி அழுதல் மறத்தன்மை யன்றென்பான் 'ஆண்மை வடுப்படுத்தென்னை?' என்றான். வருப வந்துறும் என்றது, 'நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற்படுவதெவன்' என்னும் ஊழ்வலி காட்டித் தேற்றியபடியாம்.

 

   ”வேண்டினும் வேண்டாவிடினும் உறற்பால தீண்டாவிடுதல் அரிது” (நாலடி. 109) என்றார் பிறரும்.

( 17 )
510 ஆடகச் செம்பொற் கிண்ணத்
  தேந்திய வலங்கற் றெண்ணீர்
கூடகங் கொண்ட வாழ்நா
  ளுலந்ததேற் கொல்லும் பவ்வத்
தூடகம் புக்கு முந்நீ
  ரழுந்தினு முய்வர் நல்லார்
பாடகம் போலச் சூழ்ந்த
  பழவினைப் பயத்தி னென்றான்.

   (இ - ள்.) கூடு அகம் கொண்ட வாழ்நாள் உலந்ததேல் - மெய்யிலே கொண்ட வாழ்நாள் வற்றியதேல்; ஆடகச் செம்பொற் கிண்ணத்து ஏந்திய அலங்கல் தெண்ணீர் கொல்லும் - நல்ல ஆடகப் பொற் கிண்ணத்திற் கொண்ட அசைவுற்ற தெளிந்த நீரும் கொல்லும்; பாடகம் போலச் சூழ்ந்த பழவினைப் பயத்தின் - பாடகம் என்னுங் காலணிபோல விடாது சூழ்ந்து வரும் பழமையான நல்வினைப் பயனால்; பவ்வத்தூடு அகம் புக்கு முந்நீர் அழுந்தினும் நல்லார் உய்வர் என்றான் - கடலினூடு நடுவே சென்று அக் கடலிலே அழுந்தினாலும் நல்லார் பிழைத்துக் கொள்வர் என்று கூறினான்.

 

   (வி - ம்.) 'நல்லார் பாடகம்' என இயைத்துப் பெண்களின் பாடகம் எனினும், பாடு என்பதைப் பக்கமாக்கிப் பெண்களின் பக்கல் வைத்த நெஞ்சம் எனினும் பொருந்தும். பாடகம் ஒரு கம்பியாய்ப் பல முடக்காலே போக்கும் வரவும் உண்டானாற்போலத் தோன்றிக் காலைவிடாதே கிடந்தாற்போலப் பழவினையென ஒன்றேயாயது நல்வினை தீவினையென இரண்டுபோல் தோன்றி இவனைச் சூழ்ந்து கிடக்கும் என வாழ்வுக்குஞ் சாவுக்கும் பொதுவாக்கி ஒப்புமை கூறுவர் நச்சினார்க்கினியர்.

 

   போகூழுற்றுழி ”நல்லவை எல்லாம் தீயவாம்” என்பது தோன்றப் பொற்கிண்ணத்துத் தெண்ணீரும் கொல்லும் என்றான். தெண்ணீரும் எனற்பாலதாகிய சிறப்பும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது.

 

   கூடு - உடலிற்கு உவமவாகுபெயர். முந்நீர் என்றது சுட்டு மாத்திரையாய் நின்றது. ஊழினது நன்மையை உடையார் மேலேற்றி நல்லார் உய்வர் என்றான்.

( 18 )