கடவுள் வாழ்த்து |
3 |
|
முதலும், (தொல் - மொழி - 33) என்பதனான், முதலும் என்பதொரு வினை உடன்பாட்டிற்கு உளதாம். ஆசிரியர், 'காலம் உலகம்' (தொல் - கிளவி - 58) என்றும் பிறாண்டும் சூத்திரம் செய்தலின் அது வடமொழி அன்று - ஈண்டு உலகம் என்றது உயிர்க்கிழவனை, 'உலகம் உவப்ப' (முருகு - 1) என்பது போல. ஒன்று + மூன்றும் : ஒரு மூன்றும். ஒன்று என்பதில் உள்ள குற்றியலுகரம் மெய்யொடுங்கெட்டு, 'முதலீ ரெண்ணின் ஒற்று ரகரம் ஆகும், உகரம் வருதல் ஆவயினான' (தொல் - குற்றியலுகரப் - 33) என்னும் விதியும் பெற்று, 'அளந்தறி கிளவியும்' (தொல் - குற்றியலுகரப் - 41) என்னும் சூத்திரத்துத், 'தோன்றுங்காலை' என்ற இலேசான் முடிந்தது. 'ஒரு மூன்றும் ஏத்த எய்தி' என்க. உம்மை, 'இனைத்தென அறிந்த சினை முதற் கிளவிக்கு வினைப்படு தொகுதியின்' (தொல் - கிளவி - 33) வந்தது; உலகம் என்னும் பெயர் மூன்றென்னும் பெயர்ப் பயனிலை கொண்டு, அதுதான் ஏத்த என்னும் வினைப் பயனிலை கொண்டது.
|
வருத்தமாகிய குறிப்புணர்த்திய 'தா' என்னும் உரிச்சொல், வினைக்கு முதனிலையாய்த், 'தாவாத' எனப் பெயரெச்ச மறையாய் 'இன்பம் ' என்னும் பெயரொடு முடிந்தது. 'ஏத்தத் தாவாத' என்பது, 'வினையெஞ்சு கிளவியும் ......வல்லெழுத்து மிகுமே' (தொல். உயிர் மயங்கு -2) என்பதனால் ஒற்று மிக்கது. தாவாத வின்பம் என்பது உடம்படு மெய்யாயிற்று; 'இன்பம்' என்னும் பெயர் தலையாய தென்னும் குறிப்புப் பெயரைக் கொண்டது; இன்பந்தலையாயது' என்புழி 'அல்வழி யெல்லாம் மெல்லெழுத்தாகும்' (தொல் - புள்ளி- 19) என்பதனான் மகரம் நகரம் ஆயிற்று. 'தன்னின் எய்தி' என்ற இன் காரக ஏதுப் பொருட்கண் ஐந்தாம் உருபு. 'தன்னில் எய்தி' என்று பாடமாயின், மணியினது ஒளியும் மலரினது நாற்றமும் போலத் 'தன்னுள்ளே பெற்று ' என்க. 'எய்தி' என நின்ற செய்தெனெச்சம் காரணகாரியப் பொருட்டாய், 'நின்ற' என்னும் பெயரெச்ச வினையொடு முடிந்து, அது 'குணம்' என்னும் பொருட்பெயரோடு முடிந்தது.
|
'ஓவாது' என்னும் எதிர்மறை யெச்சமும் 'நின்ற' என்பதனோடு முடியும். குணத்து : அத்து : இரண்டா முருபின்கண் வந்த சாரியை. 'அத்தே வற்றே ஆயிருமொழி மேல் - ஒற்றுமெய் கெடுதல் தெற்றென்றற்றே' (தொல் - புணரியல் -31) என்பதனால் மகரங்கெட்டு, அத்தின் அகரம் அகர முனையில்லை' (க்ஷ - க்ஷ -23) என்பதனால் அகரம் கெட்டு முடிந்தது. 'குணத்தொண்ணிதி' என்பதில், 'குற்றியலுகரமும் அற்று' (க்ஷ - க்ஷ - 3) என்பதனால் வருமாழியின் ஒகரம் ஏறிற்று. ஒண்ணிதி : பண்புத்தொகை. ஒண்ணிதிச் செல்வன் : இகர வீற்று வேற்றுமைச் சொல்லாதலின் வல்லெழுத்து மிக்கது 'செல்வன்' என்றார் அழியாத இன்பத்தை நுகர்தலின், 'என்ப' என்னும் முற்றுச் சொல் 'பெரியார்' என்னும் தோன்றா எழுவாய்க்குப் பயனிலையாயிற்று. தேவும் தெய்வத்துக்கு ஒரு பெயர். தேவுக்கு ஆதிதேவன் என நான்கன் உருபு விரிக்க. ஆதியாகிய தேவன் என்க. செம்மை + அடி : சேவடி பண்பு மாத்திரையாய்க் குறைந்த சொல்லாதலின் மருவின் பாத்தியதாய் (தொல் குற்றியலுகரப் - 77) நின்றது. 'சேவடி சேர்தும்' ஒற்றுஇரட்டாது நின்றது இரண்டாவதற் கோதிய திரிபில் 'அன்ன பிறவால்' (தொல் - தொகை - 15) 'சேர்தும்' : தும் ஈற்றுப் பன்மைத்தன்மை: ஈண்டு ஒருவரைக் கூறும் பன்மை. அன்று: அசை. ஏகாரம் : ஈற்றசை.
|
|
|