பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 300 

511 வினையது விளைவின் வந்த வீவருந் துன்ப முன்னீர்க்
கனைகட லழுவ நீந்திக் கண்கனிந் திரங்கல் வேண்டா
நனைமலர்ப் பிண்டி நாத னாண்மலர்ப் பாத மூலம்
நினையுமி னீவி ரெல்லா நீங்குமி னச்ச மென்றான்.

   (இ - ள்.) வினையது விளைவின் வந்த வீவு அருந்துன்பம் முன்நீர்க் கனைகடல் அழுவம் நீந்தி - தீவினையின் பயனாகி வந்த துன்பமாகிய பழைய நீரையுடைய ஒலிக்குங்கடற்பரப்பை நீந்தி; கண் கனிந்து இரங்கல் வேண்டா - கண்ணைக் குழைத்து வருந்தல் வேண்டா; நனை மலர்ப் பிண்டி நாதன் நாள் மலர்ப் பாத மூலம் - குளிர்ந்த மலரையுடைய அசோகின் நீழலில் எழுந்தருளிய அருகப் பெருமானின் புதிய மலரனைய திருவடியாதரவை; நீவிர் எல்லாம் நினையுமின் - நீவிர் எல்லீரும் நினையுங்கள்; அச்சம் நீங்குமின் என்றான் - அச்சத்தை விடுவீர்களாக என்று கூறினான்.

 

   (வி - ம்.) பாத மூலம்: திருவடியாகிய, துன்பம் நீங்குதற்குக் காரணமானது. கலம் படுதலும் அவர் வருத்தமுமாக இவனுக்குத் தோன்றினவே அன்றி அவர்க்கு இவையில்லை. இதனைப் பின்னர் 'நாடகம் நாங்களுற்து' (சீவக. 582) என்றதனாலும் பிறவற்றாலும் உணர்க.

 

   இடுக்கண் என்பதுமுதல் இச்செய்யுளீறாகச் சீதத்தன் கூறும் அறிவுரைகள் ஆற்றவும் இனியன ஆதல் உணர்க.

 
  ”தனக்குவமை யில்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லான்  
  மனக்கவலை மாற்றல் அரிது.” (குறள். - 7)  

   பழவினை பற்றிப் பேசிய சீதத்தன் நாதன் பாதமூலம் நினைமின் என்று செவியறிவுறுத்தது ஆழ்ந்த கருத்துடையதாம்.

( 19 )
512 பருமித்த களிற னானும் பையெனக் கவிழ்ந்து நிற்பக்
குருமித்து மதலை பொங்கிக் கூம்பிறப் பாய்ந்து வல்லே
நிருமித்த வகையி னோடி நீர்நிறைந் தாழ்ந்த போதி
லுருமிடித் திட்ட தொப்ப வுள்ளவ ரொருங்கு மாய்ந்தார்.

   (இ - ள்.) பருமித்த களிறு அனானும் - அணி செய்யப்பட்ட களிற்றியானையை ஒத்த சீதத்தன்; பையெனக் கவிழ்ந்து நிற்ப - (தான் ஏனையோர்க் கறிவுறுத்தியபடி நாதன் நலங்கிளர் பாதமூலத்தை நினைவானாய்) மெல்லெனத் தலைவணங்கி நின்றானாக அப்பொழுது; மதலை குருமித்துப் பொங்கி கூம்பு இற - மரக்கலம் முழங்கிப் பொங்கி பாய்மரம் முறியும்படி; நிருமித்த வகையின் வல்லே ஓடி - தான் நினைத்த வழியிலே விரைந்து பாய்ந்து; நீர்நிறைந்து உரும் இடித்திட்டது ஒப்ப ஆழ்ந்த போதில் - நீர் நிறைந்து இடி இடித்த தன்மையைப்போல்