பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 301 

கடலினுள் அழுந்தியது, அங்ஙனம் அழுந்தியபொழுது; உள்ளார் ஒருங்கு மாய்ந்தார் - அதன்கண் உள்ளவரெல்லாம் ஒருசேர மறைந்தொழிந்தார்.

 

   (வி - ம்.) பருமித்தல் - அணிசெய்தல். பையென: குறிப்புமொழி. கவிழ்ந்து நிற்ப என்றது இறைவனைத் தலைவணங்கி நினைந்து நின்றான் என்றவாறு. குருமித்தல் - முழங்குதல். நிருமித்தல் - நினைத்தல்.

( 20 )

வேறு

 
513 ஓம்பிப் படைத்த பொருளும்முறு காதலாரும்
வேம்புற்ற முந்நீர் விழுங்கவ்விரை யாது நின்றான்
கூம்பிற்ற துண்டந் தழுவிக்கிடந் தான்கொ ழித்துத்
தேம்பெற்ற பைந்தா ரவனைத்திரை யுய்த்த தன்றே.

   (இ - ள்.) ஓம்பிப் படைத்த பொருளும் உறு காதலாரும் - பாவத்தை நீக்கித் திரட்டிய செல்வத்தையும் உற்ற அன்புடையாரையும்; வேம்பு உற்ற முந்நீர் விழுங்க - உவர்ப்பினையுடைய கடல்நீர் விழுங்கவும்; விரையாது நின்றான் - கலங்காமல் நின்றவன்; கூம்பு இற்ற துண்டம் தழுவிக் கிடந்தான் - கூம்பு ஒடிந்த துண்டம் ஒன்றைப் பற்றிக் கிடந்தான்; தேன் பெற்ற பைந்தார் அவனைத் திரை கொழித்து உய்த்தது - தேன் பொருந்திய புதிய மாலையினனாகிய அவனை அலை கொழித்துக் கரையிலே சேர்த்தது.

 

   (வி - ம்.) அன்று, ஏ: அசைகள்.

 

   தீவினை செய்யாமல் அறத்தாற்றின் ஈட்டிய பொருள் என்பார் ஓம்பிப் படைத்த பொருள் என்றார். ஓம்புதலாவது,

 
  ”வடுவஞ்சி வாய்மொழிந்து  
  தமவும் பிறவும் ஒப்பநாடிக்  
  கொள்வதூஉ மிகைகொளாது  
  கொடுப்பதூஉம் குறைகொடாது” (பட். 208 - 211)  

வாணிகஞ் செய்தல் என்க.

 

   சீதத்தன் தான் கூறியதற்கிணங்கவே இடுக்கணழியாது நின்றான் என்பார் விரையாது நின்றான் என்றார்.

( 21 )
514 நாவா யிழந்து நடுவாருமி
  லியாம நீந்திப்
போவாய் தமியே பொருளைப் பொரு
  ளென்று கொண்டாய்