காந்தருவ தத்தையார் இலம்பகம் |
302 |
|
514 |
வீவா யெனமுன் படையாய்படைத் |
|
தாய்வி னையென் |
|
பாவா யெனப்போய்ப் படுவெண்மணற் |
|
றிட்டை சோ்ந்தான். |
|
(இ - ள்.) வினை என் பாவாய் - வினையென்னும் பாவையே!; பொருளைப் பொருள் என்று கொண்டாய் வீவாய் என முன் படையாய் - பொருளீட்டலையே பொருளாகக் கொண்ட நீ இறந்து போவாய் என்று முன்னரே படையாமல் விட்டாய்; நாவாய் இழந்து யாரும்இல் நடு யாமம் நீந்தித் தமியே போவாய் எனப் படைத்தாய் - மரக்கலத்தை இழந்து யாரும் இல்லாத நள்ளிரவிலே கடலை நீந்தித் தனியே போவாய் என்று படைத்தனையே; எனப் போய்ப் படு வெண்மணல் திட்டை சேர்ந்தான் - என்று கூறியவாறே சென்று கூடிய வெண்மணல் மேட்டை அடைந்தான்.
|
|
(வி - ம்.) என என்பதனை இரண்டிடத்துங் கூட்டுக.
|
|
இதனானும் ஆசிரியர் சீதத்தனின் மெய்யுணர்ச்சியையே வெளிப்படுத்துதல் அறிக. என்னை? ஊழான் வருவனவற்றை ஏற்று நுகர்ந்த இஃது ஊழ்வினைப்பயன் என்று கோடலே மெய்யுணர்வோர் செயலாதலான் என்க. ஆசிரியர் இச் சீதத்தன் சொற்செயல்களானே வெளிப்படுத்தும் பொருள் மிக இனியன.
|
( 22 ) |
வேறு
|
|
515 |
பொரியரை ஞாழலும் புன்னையும் பூத்து |
|
வரிதரு வண்டொடு தேனின மார்க்குந் |
|
திருவிரி பூம்பொழிற் செவ்வனஞ் சோ்ந்தாங் |
|
கருவரை மார்ப னவலித் திருந்தான். |
|
(இ - ள்.) பொரிஅரை ஞாழலும் புன்னையும் பூத்து - பொரிந்த அடிமரத்தையுடைய புலிநகக் கொன்றையும் புன்னையும் மலர்ந்து; வரிதரு வண்டொடு தேனினம் ஆர்க்கும்- இசையைத் தரும் வண்டின் திரளும் தேனின் திரளும் முரல்கின்ற; திரு விரி பூம்பொழில் - அழகு மலர்ந்த மலர்ப் பொழிலிலே; அருவரை மார்பன் செவ்வனம் சேர்ந்து - அரிய மலையனைய மார்பன் நேரே சென்று; ஆங்கு அவலித் திருந்தான் - அங்கே வருத்தத்துடன் இருந்தான்.
|
|
(வி - ம்.) செவ்வனம் : அம் : அசை.
|
|
பொரியரை : வினைத்தொகை. ஞாழல் - புலிநகக் கொன்றை. வண்டு, தேன் என்பன வண்டின் வகை. திரு - அழகு
|
( 23 ) |