பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 306 

   (இ - ள்.) பசும்புயல் தண்துளி பக்கம் நனைப்ப - கரிய முகிலின் தண்ணிய நீர்த்துளி தம் மருங்கை நனைக்குமாறு; விசும்பு இவர் மேகம் விரைவினர் போழ்ந்து - வானில் ஏறும் முகிலினூடே விரைந்து அதனைப் பிளந்துகொண்டு; நயந்தனர் போகி - விருப்பத்துடன் சென்று; நறுமலர்ச் சோலை அசும்பு இவர் சாரல் அருவரை சார்ந்தார் - நறிய மலர்க்காவினையும் நீர்ப் பொசிவுடைய சாரலையும் உடைய மலையை அடைந்தனர்.

 

   (வி - ம்.) விரைவினர், நயந்தனர்: முற்றெச்சங்கள். அசும்பு - நீர்க்கசிவு.

( 30 )
523 கண்டா லினியன காண்டற் கரியன
தண்டா மரையவ டாழுந் தகையன
கொண்டான் கொழுங்கனி கோட்டிடைத் தூங்குவ
வுண்டா னமிழ்தொத் துடம்பு குளிர்ந்தான்.

   (இ - ள்.) கண்டால் இனியன - கண்டால் இனிமை தருவனவாயும்; காண்டற்கு அரியன - (ஆனாற்) காண்பதற்கு அரியனவாயும்; தண்டாமரையவள் தாழும் தகையன - குளிர்ந்த தாமரையில் வாழ்பவளான திருமகளும் விரும்பும் பெருமையுடையனவாயும்; கோட்டிடைத் தூங்குவ கொழுங்களி - மரக்கொம்புகளிலே தொங்குவனவாகிய வளமிகுங் கனிகளை; கொண்டான் உண்டான் - சீதத்தன் பறித்துத் தின்றான்; அமிழ்து ஒத்து உடம்பு குளிர்ந்தான் - அமிழ்தம் உண்டவன்போல மெய்குளிர்ந்தான்.

 

   (வி - ம்.) கண்டால் இனியன என்றது காட்சி மாத்திரையானே இன்பந்தரும் எழிலுடையனவாகவும் என்றவாறு. காண்டற்கரியன - இவ்விச்சாதரர் நாட்டிலன்றி இவ்வுலகிற் காண்டற் கியலாதனவாகவும் என்றவாறு. அருமை ஈண்டு இன்மை மேற்று. தாழும் - விரும்பும். தூங்குவ - பலவறிசொல்; தூங்குவ கொண்டான் என மாறுக.

( 31 )
524 மழை தவழ் சோலை மலைமிசை நீண்ட
குழைதவழ் குங்குமங் கோழரை நாகந்
தழைதவழ் சந்தனச் சோலையி னோக்கி
யிழைதவழ் மார்ப னினிதி னுவந்தான்.

   (இ - ள்.) இழை தவழ் மார்பன்- அணிகலன் பரவிய மார்பனான சீதத்தன்; மழைதவழ் சோலை மலைமிசை - முகில் பரவும் சோலைகளையுடைய அம் மலையின்மேல்; நீண்ட குழை தவழ் குங்குமம் - நீண்ட தளிர் பரவிய குங்கும மரங்களையும்; கோழ் அரை நாகம் - வளமிகும் அடிமரத்தையுடைய சுரபுன்னை மரங்களையும்; தழைதவழ் சந்தனச் சோலையின் நோக்கி - தழை