பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 307 

கள் பரவிய சந்தனச் சோலையுடன் பார்த்து; இனி தின் உவந்தான் - இனிமையாலே மனம் மகிழ்ந்தான்.

 

   (வி - ம்.) இதனால், சீதத்தன் கலையுணர்ச்சி உடையனாதல் கூறப்பட்டது.

( 32 )
525 கோதை யருவிக் குளிர்வரை மேனின்று
காதங் கடந்தபின் கன்னிக் கொடிமதி
னாத னுறைவதோர் நன்னக ருண்டங்குப்
போது மெழுகெனப் போயினர் சார்ந்தார்.

   (இ - ள்.) கோதை அருவிக் குளிர்வரைமேல் நின்று - மலர்மாலைபோல ஒழுகும் அருவியையுடைய குளிர்ந்த மலைமேலிருந்து; காதம் கடந்தபின் - காதவழி சென்றால்; கன்னிக் கொடிமதில் நாதன் உறைவது ஓர் நலநகர் உண்டு - அழிவற்ற கொடியையுடைய மதில் சூழ்ந்த இறைவன் வாழும் ஓர் அழகிய கோயில் உண்டு; அங்குப் போதும் எழுக என - அங்கே செல்வோம் எழுக என்று கூற; போயினர் சார்ந்தார் - அங்கே சென்று அடைந்தார்.

 

   (வி - ம்.) முன் 'வரையளவு' என்றான். ஆதலால், இப்போது 'நன்னகரைக் காணப்போதும்' என மேலுங் கூறினான். நகர் எனவே அருகன் கோயில் என்று சீதத்தன் கருதியதாக நச்சினார்க்கினியர் உரைப்பர்.

 

   கோதை யருவி - கோதை போன்ற அருவி, குளிர்வரை: வினைத்தொகை. அவன் விரும்பி வருதற்பொருட்டு அரசன் என்னாது நாதன் கோயில் என்றான். நாதன் கோயில் என்றது இறைவன் திருக்கோயிலையும் குறிக்குமாகலின் என்க. போதும்: தன்மைப் பன்மை. கன்னிமதில் கொடிமதில் எனத் தனித்தனிக் கூட்டுக

( 33 )

வேறு

 
526 மேகமே மிடைந்து தாழ
  விருள்கொண்ட வெள்ளிக் குன்ற
மாகத்து விளங்கித் தோன்றும்
  வனப்புநாம் வகுக்க லுற்றா
னாகந்தான் கரிய தொன்று
  கீழ்நின்று நடுங்கக் கவ்விப்
பாகமே விழுங்கப் பட்ட
  பான்மதி போன்ற தன்றே.

   (இ - ள்.) தாழ மேகமே மிடைந்து இருள்கொண்ட வெள்ளிக் குன்றம் - தாழ்வரை யெல்லாம் மேகமே நெருங்கி