பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 309 

   பூரித்து - நிரப்பி. ஒரு தேவன் என்றது தான் கருதியதனைக் கருதியபடியே இயற்றவல்ல ஒரு தேவன் என்பதுபட நின்றது.

( 35 )

வேறு

 
528 பொங்கி யாயிரந் தாமரை பூத்தபோற்
செங்க ணாயிரஞ் சோ்ந்தவன் பொன்னகர்
கொங்கு தோய்குழ லாரொடுங் குன்றின்மேற்
றங்கு கின்றது போற்றகை சான்றதே.

   (இ - ள்.) தாமரை பொங்கி ஆயிரம் பூத்த போல் - தாமரை மிக்கு ஆயிரம் தாமரைப் பூக்களைப் பூத்தன போல; ஆயிரம் செங்கண் சேர்ந்தவன் பொன் நகர் - ஆயிரம் அழகிய கண்கள் பொருந்திய இந்திரனுடைய அமராவதி; கொங்குதோய்குழலாரொடும் - மணங் கமழுங் கூந்தலையுடைய அரம்பையரோடும்; குன்றின்மேல் தங்குகின்றது போல் - இவ்வெள்ளிக் குன்றின் மேல் தங்கியிருப்பது போன்ற; தகை சான்றது - அழகு பொருந்தியது.

 

   (வி - ம்.) தாமரை பொங்கி ஆயிரம் பூத்தபோல் என மாறுக. கண் ஆயிரஞ்சேர்ந்தவன் - தேவேந்திரன். நகர் என்றது - அமராவதியினை. குழலார் - ஈண்டுத் தேவமகளிர்.

( 36 )
529 கிடங்கு சூழ்மதிற் கேழ்கிளர் பூங்கொடி
மடங்க னோக்கியர் வாண்முகம் போலுமென்
றுடங்கு வெண்மதி யுள்குளி ரத்தங்
குடங்கை யாற்கொம்மை கொட்டுவ போன்றவே.

   (இ - ள்.) கிடங்கு சூழ்மதில் கேழ்கிளர் பூங்கொடி - அகழிசூழ்ந்த மதிலில் இருக்கும் நிறம் விளங்கிய அழகிய கொடிகள்; வெண்மதி - வெண்மதியைத் (தடவுதல்); மடங்கல் நோக்கியர் வாள் முகம்போலும் என்று - (அம்மதி) சிங்கப் பார்வையையுடைய மங்கையரின் ஒளிரும் முகம்போலும் என்று கருதி; உடங்கு உள்குளிர - முற்றும் உள்ளங் குளிர; தம் குடங்கையால் கொம்மை கொட்டுவ போன்ற - தம்முடைய உள்ளங்கையினாலே அம்மதியின் புறத்தை (நீ மங்கையர் முகம் ஒப்பை! நல்லை! நல்லை!! என்று கூறி) தட்டுவன போன்றிருந்தன.

 

   (வி - ம்.) பூங்கொடி - அழகிய கொடி. மடங்கல் - அரிமா. அரிமா நோக்குமாறு முன்னும் பின்னும் நோக்கும் இயல்புடைய மகளிர் என்றவாறு. தம - அகரம். ஆறாவதன் பன்மையுருபு. கொம்மை - புறம் மதிலில் உயர்த்திய கொடிகள் வானுற உயர்ந்துநின்று ஆடின என்பது கருத்து.

( 37 )