பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 31 

   (இ - ள்.) கடும்புனல் ஒலியும் - படலிட்டதினின்றும் குதித்து வழிந்துசெல்லும் நீரின் ஒலியும்; காப்பவர் கவ்வையும் - கரை காப்பாருடைய ஆரவாரமும்; நூறாயிரம் சிலைக்கும் பம்பையும் - நூறாயிரக்கணக்காக ஒலிக்கும் பறையொலியும்; எவ்எலாத் திசைகளும் ஈண்டி - எல்லா எல்லாத் திசைகளிலும் கூடி; காரொடு பவ்வம் நின்று இயம்புவது ஒத்த -காரும் கடலும் மாறாமல் முழங்குதலை ஒத்தன.

 

   (வி - ம்.) செவ்வன் - நேரே.

 

   'காப்பவர் கவ்வையும்' எனக் கூட்டுக. கவ்வை, சிலை, இயம்பல் என்பவை பல வேறுவகை ஒலிகள். கடும்புனல் - விரையும் புனல். கடி என்னும் உரிச்சொல் திரிந்தது.

( 13 )
43 மாமனு மருகனும் போலு மன்பின
காமனுஞ் சாமனுங் கலந்த காட்சிய
பூமனு மரிசிப்புல் லார்ந்த மோட்டின
தாமின மமைந்துதந் தொழிலின் மிக்கவே.

   (இ - ள்.) தம் தொழிலின் மிக்க - தம் உழவுத்தொழிலிலே சிறந்து நின்றனவாகிய எருமை முதலியன; மாமனும் மருகனும் போலும் அன்பின - மாமனையும் மருகனையும் போலும் அன்பின; காமனும் சாமனும் கலந்த காட்சிய - காமனும் அவன் தம்பி சாமனும் கலந்து நின்றாலன்ன தோற்றத்தின ; பூமனும் அரிசிப்புல் ஆர்ந்த மோட்டின - பூக்களையும் அரிசிப்புல்லையும் தின்ற வயிற்றினவாகி ; இனம் அமைந்து (நின்றன) - திரளமைந்து நின்றன.

 

   (வி - ம்.) இதற்கு 'நின்றன' என ஒரு சொல் வருவிக்க. ஒன்றுக்கொன்று பிற்படின் வருந்தும் என்று அன்புகூறினார். சாமன் - காமன் தம்பி. 'ஆவயிற் குறிப்பே ஆக்கமொடு வருமே' (தொல்- எச்-36) என்பதனால் மோட்டின என்பதன் பின் 'ஆக்கம்' வருவிக்க.

 

   மோடு - வயிறு.

( 14 )
44 நெறிமருப் பெருமையி னொருத்த னீளினஞ்
செறிமருப் பேற்றினஞ் சிலம்பப் பண்ணுறீஇப்
பொறிவரி வராலின மிரியப் புக்குடன்
வெறிகமழ் கழனியுள் ளுழுநர் வெள்ளமே.

   (இ - ள்.) நெறிமருப்பு எருமையின் ஒருத்தல் நீள் இனம் - (அவ்வாறு நின்ற) அறல்பட்ட கொம்பினையுடைய எருமைகளிற் கடாக்களின் பெருந்திரளையும்; செறி மருப்பு ஏற்றினம் - திண்ணிய கொம்புகளையுடைய எருத்தின் திரளையும்; சிலம்பப் பண்