பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 312 

அளவற் புகையை; வீக்கி மாடம் திறந்திட - மாடங்களிற் சாளரங்களை அடைத்து நிறைத்து அவற்றைத் திறக்க; ஊக்கி வாய்விட்டு மெல்ல உயிர்ப்பன போன்ற - அம்மாடங்கள் புகையைப் பொறுக்க மாட்டாது வலிய வாயைத் திறந்து மெல்லென உமிழ்வன போன்றன.

 

   (வி - ம்.) கூட்டாவன : ”நேர்கட்டி செந்தேன் நிரியாசம் கர்ப்பூரம் - ஆரம்... ஐந்து” நிரியாசம் - பிசின். அது குங்குலியம் முதலியன - என்பர் நச்சினார்க்கினியர்.

 

   'நேர்கட்டி செந்தேன் நிரியாசம் பச்சிலை - ஆரம் அகிலுறுப்போராறு' என்பர் அடியார்க்கு நல்லார் (சிலப். 5-14)

 

   தேம்கண் : தேக்கண் என வலித்து நின்றது. தேம்-தேன்; நெய். திறந்திட என்றதனால் முன்னர் அப்புகையை அடைத்து வைத்துத் தேக்கினர் என்பதுணரலாம் : வீக்குதல் - தேக்குதல். இது மாடம் மண முடையதாதற்பொருட்டு. இதன் கண் கூறப்படும் உவமை இனிது.

( 42 )
535 தப்பில் வாய்மொழித் தானவர் வைகிய
வொப்பின் மாநக ரொண்மைமற் றியாதெனிற்
கப்பத் திந்திரன் காமுறு மாமணிச்
செப்பு வாய்திறந் தன்னதொர் செம்மற்றே.

   (இ - ள்.) தப்பு இல் வாய்மொழித் தானவர் வைகிய ஒப்பு இல் மாநகர் ஒண்மை மற்று யாது எனில் - குற்றமற்ற வாய்மொழியை உடைய வித்தியாதரர் வாழ்கின்ற உவமையில்லாத அப் பெருநகரின் விளக்கம் மற்றும் எங்ஙன மிருந்ததெனில்; கப்பத்து இந்திரன் காமுறும் மாமணிச் செப்பு - இவ்வூழிக்குரிய இந்திரன் விரும்பிய பூண்தங்கும் மாமணிச் செப்பு; வாய்திறந்து அன்னது ஓர் செம்மற்று - வாய்திறந்தாற் போலுந் தலைமையினை உடையது எனலாம்.

 

   (வி - ம்.) கற்பம் : கப்பம் எனத் திரிந்தது : தற்பவம்.

 

   தானவர் - வித்தியாதரர். ஒண்மை - விளக்கம். செம்மற்று - தலைமையினையுடையது. என்னலாம் என்பது இசையெச்சம்.

( 43 )

வேறு

 
536 நன்னகர் நோக்கி நாய்கன்
  நாகங்கொல் புகுந்த தென்னப்
பொன்னகர் பொலியப் புக்குப்
  பொங்குமா மழைக டங்கு