பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 313 

536 மின்னவிர் செம்பொன் மாடத்
  திருவரு மிழிந்து புக்குப்
பின்னவன் விருந்து பேணிப்
  பேசினன் பிறங்கு தாரான்.

   (இ - ள்.) நாய்கன் நல்நகர் நோக்கி - சீதத்தன் அந்த அழகிய நகரைப் பார்த்து; நாகம் கொல் புகுந்தது! என்ன - நாகர் நகரோ நாம் நெருங்கியது என்று கருதி; பொன் நகர் பொலியப் புக்கு - அப் பொன் னகர் விளங்கப் புகுந்து; பொங்கும் மா மழைகள் தங்கும் மின் அவிர் செம் பொன் மாடத்து - கிளரும் பெருமுகில்கள் தங்கும் ஒளிவிடும் தரனுடைய பொன்மாடத்திலே; இருவரும் இழிந்து புக்கு - தரனும் சீதத்தனும் (வானிலிருந்து) இறங்கிப் புகுந்தபோது: பிறங்குதாரான் அவன் விருந்து பேணிப் பின் பேசினன் - விளங்கும் மாலையணிந்த தரன் சீதத்தனுக்கு விருந்தளித்து ஓம்பிப் பிறகு ஒரு மொழி உரைத்தான்.

 

   (வி - ம்.) வித்தியாதர நகரிலே உள்ள மாடமாகையால் தரன் மனையென்றும், அவன் நகராகையால் விருந்து பேணினன் தரனென்றுங் கொள்ளப்பட்டன.

 

   மழைதங்கும் இருவர் என இயைத்துத், தரன் கதியால் மழையில் தங்கினான் என்றும், சீதத்தன் கொடையால் தங்கினான் என்றும் விளக்கங் கூறுவர் நச்சினார்க்கினியர். மற்றும், 'இனி வெள்ளி மலை மேகபதத்திற்கு மேலென்றாரேனும் மேகம் எங்கும் உளதென்று வைத்து, மழைகள் தங்கும் மாடம் என்றுமாம்' எனவும் பொருள் கூறுவர். அவர், அண்மையிலே உள்ள சொல்லுடன் பொருந்தா வழியன்றே சேய்மைச் சொல்லுடன் இசைத்தல் வேண்டும்; எனவே, 'மழைகள் தங்கும் மாடம்' என இசைப்பதே பொருத்தம்.

( 44 )
537 மாடியந் தானை மன்னர் மாமணி நாக மாகக்
கேடில்சீர்க் கலுழனாய கலுழவே கற்குத் தேவி
தோடலர் கோதைத் தொல்சீர்த் தாரணி சுரும்புண் கண்ணி
யாடவ ரறிவு போழு மணிமுலை யணங்கி னன்னாள்.

   (இ - ள்.) மாடியம் தானை மன்னர் மா மணி நாகம் ஆக - மாடியம் என்னும் கவசத்தை அணிந்த படை வேந்தர் பெருமணியை உடைய நாகங்களாகவும்; கேடு இல் சீர் கழலுன் ஆயகலுழ வேகற்குத் தேவி-கெடுதல் அற்ற புகழையுடைய கருடன் தானாக அமைந்த கலுழ வேகனுக்கு மனைவி; தோடு அலர் கோதை தொல்சீர் தாரணி-இதழ் விரிந்த பூமாலை யுடைய பழம் புகழையுடைய தாரணி என்பவள்; சுரும்பு உண் கண்ணி - வண்டுகள் தேனைப்பருகும் கண்ணியையும்; ஆடவர் அறிவு