காந்தருவ தத்தையார் இலம்பகம் |
314 |
|
போழும் அணி முலை - ஆடவரின் அறிவைப் பிளக்கும் அழகிய முலையையும் உடைய; அணங்கு அன்னாள் - தெய்வம் போன்றவளாகிய.
|
|
(வி - ம்.) இப்பாட்டுக் குளகம். அணங்கின் : இன் : சாரியை.
|
|
மாடியம் - கவசம். கலுழவேகன் - அந்நகரத்து மன்னன். தாரணி என்பவள் என்க.
|
( 45 ) |
538 |
விண்ணகம் வணங்க வெண்கோட் |
|
டிளம்பிறை முளைத்த தேபோற் |
|
பண்ணகத் தினிய சொல்லாள் |
|
பாவையைப் பயந்த ஞான்றே |
|
யெண்ணிட மின்றி மன்ன |
|
ரிம்மலை யிறைகொண் டீண்டி |
|
யண்ணலங் களிற்றி னுச்சி |
|
யருங்கல வெறுக்கை யீந்தார். |
|
(இ - ள்.) பண் அகத்து இனிய சொல்லாள் பாவையை - பண்ணிலே பொருந்திய இனிய சொல்லா ளாகிய பாவை போன்றவளை; விண்அகம் வணங்க வெண்கோட்டு இளம்பிறை முளைத்ததேபோல் - வானுலகு வணங்குமாறு வெண்மையான கோடுகளையுடைய பிறை தோன்றினாற்போல; பயந்த ஞான்றே - பெற்ற அந்நாளிலேயே; எண் இடம் இன்றி மன்னர் இம் மலை ஈண்டி இறைகொண்டு - எள்ளிடவும் இடமின்றி மன்னரெல்லோரும் இம்மலையிலே கூடித் தங்குதல் கொண்டு; அண்ணல்அம் களிற்றின் உச்சி அருங்கல வெறுக்கை ஈந்தார் - பெருமை மிக்க களிற்றின் மீதிருந்து அரிய கலன்களையும் செல்வத்தையும் ஏற்போர்க் களித்தனர்.
|
|
(வி - ம்.) மன்னர் வெறுக்கை ஈந்தது அப்பெண் தத்தமக்கே வேண்டும் என்று அதற்கறிகுறியாக என்க.
|
( 46 ) |
539 |
மந்திரத் தரசன் வல்லே நிமித்திகன் வருக என்றாற் |
|
கந்தரத் தோடு கோளின் சாதக மவனுஞ் செய்தா |
|
னிந்திர திருவி லேய்ப்பக் குலவிய புருவத் தாட்கு |
|
வந்தடை பான்மை மண்மேல் இராசமா புரத்த தென்றான். |
|
(இ - ள்.) மந்திரத்து அரசன் நிமித்தன் வல்லே வருக என்றாற்கு - வித்தியாதர உலகத்து மன்னனாகிய கலுழவேகன் கணியை விரைவில் கொணர்க என்றவனுக்கு; அவனும் அந்தரத்து ஓடு கோளின் சாதகம் செய்தான் - வந்த கணியும்;
|
|