காந்தருவ தத்தையார் இலம்பகம் |
315 |
|
வானில் ஓடும் கோள்களாலே ஆராய்ந்து சாதகம் எழுதினான்; இந்திர திருவில் ஏய்ப்பக் குலவிய புருவத்தாட்கு - வானவில் போல வளைந்த புருவத்தினாளுக்கு; மண்மேல் இராசமா புரத்து வந்து அடை பான்மை என்றான் - மண்ணுலகில் இராசமா புரத்திலேயே வரவேண்டிய நல்வினைப் பயன் உளது என்றான்.
|
|
(வி - ம்.) மந்திரம்: ஆகுபெயரால் மந்திரம் வல்ல உலகாகிய வித்தியாதர உலகை உணர்த்தியது.
|
|
வல்லே - விரைவாக, அந்தரம் - வானம். இந்திரதிருவில் - வானவில். பான்மை - ஈண்டு நல்வினை. புரத்தது - புரத்தின்கண்ணது. எனவே, அந் நல்வினை இவட்கு இராசமாபுரத்தில் இவள் உள்ளாய பொழுது வருவதாம் என்றவாறாயிற்று.
|
( 47 ) |
540 |
அவனுரை தெளிந்து வேந்த |
|
னாசையு ளரசர் நிற்பக் |
|
கவனங்கொள் புரவிக் கொட்பிற் |
|
காதலுங் கரந்து வைத்தா |
|
னவனதே கருதிற் றாங்கொ |
|
லன்றுகொ லறிய லாகா |
|
திவணது மறிது மென்று |
|
கோயிலுக் கேகி னானே. |
|
(இ - ள்.) வேந்தன் அவன் உரை தெளிந்து- கலுழவேகன் கணியின் மொழியை உணர்ந்து; அரசர் ஆசையுள் நிற்ப - அரசர்கள் எமக்குக் கன்னியைத் தருவான் என்ற ஆசையிலே நிற்ப; கவனம் கொள் புரவிக் கொட்பின் காதலும் கரந்து வைத்தான் - கவனச் செலவையுடைய குதிரையின் மனச்சுழற்சி போலத் தன் விருப்பத்தை வெளியிடாது வைத்தான்; அவன் அதே கருதிற்று ஆம் கொல்? அன்று கொல்? அறியலாகாது - அவன் கருதியது கணி கூறியதேயா யிருக்கின்றதோ? அன்றி, அரசர் கருதியதோ? அறிய வியலாது; இவண் அதுவும் அறிதும் என்று - இப்போது அதனையும் அறிவோம் என்று கூறி; கோயிலுக்கு ஏகினானே - (சீதத்தனையும் அழைத்துக்கொண்டு) கலுழ வேகனுடைய அரண்மனைக்குச் சென்றான்.
|
|
(வி - ம்.) அஃது என்பது 'அதும்' என விகாரப்பட்டது. குதிரையின் கவனமாவது இடமும் வலமும் பாய்தலாகும். முன்னிரண்டடிகளையும் ஒக்கவைத்துப் பாய்ச்சல் என்பர் தக்கயாகப் பரணி உரைகாரர் (தக்க. 103. உரை) இவண் அறிதும் என்றான் இராசமாபுரத்தேயிருந்து சீதத்தன் வந்திருப்பதால். அரசனது கருத்துத் தௌ்ளிதின் உணரலாகாமையின் இவனுக்கு உண்மை கூறாது பின்னர் உணர வைத்தான்.
|
|