பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 316 

வேந்தர் என்றது, பிறந்த பொழுதே அவளை விரும்பி வெறுக்கையீந்த அவ் வேந்தர் என்பதுபட நின்றது. அவன் - கணி.

 

   அவனஃதே எனற்பால சுட்டு அவனதே என்று நின்றது. அஃதே - அக் கணி கூறியதனையே.

( 48 )
541 பால்பரந் தன்ன பட்டார் பூவணை பசும்பொற் கட்டிற்
கால்பரந் திருந்த வெங்கட் கதிர்முலை கச்சின் வீக்கி
வேல்பரந் தனைய கண்ணார் வெண்மதிக் கதிர்பெய் கற்றை
போலிவர் கவரி வீச மன்னவ னிருந்த போழ்தின்.

   (இ - ள்.) கால் பரந்து இருந்த வெங்கண் கதிர்முலை கச்சின் வீக்கி - அடி பரவியிருந்த விருப்பமூட்டும் கண்களையுடைய ஒளியுறும் முலைகளைக் கச்சினாலே இறுகக் கட்டி; வேல் பரந்த அனைய கண்ணார் - வேல் கொலைத் தன்மையிற் பரவினாற் போன்ற கண்ணினார்; வெண்மதிக் கதிர் பெய்கற்றைபோல் இவர் கவரி வீச - வெண் திங்களின் கதிர்களைச் சொரிந்தாற் போன்று அசையா நின்ற கவரியை வீச; பால் பரந்த அன்னபட்டு ஆர் பூ அணை பசும் பொன் கட்டில் - பாலாவி பரவினாற் போன்ற பட்டுப் போர்த்த மலரணை யுடைய பசும் பொன் கட்டிலிலே; மன்னவன் இருந்த போழ்தில் - கலுழவேகன் அமர்ந்திருந்தபோது,

 

   (வி - ம்.) இப் பாட்டுக் குளகம்.

( 49 )
542 என்வர விசைக்க வென்ன
  வாயிலோ னிசைப்ப வேகி
மன்னர்தம் முடிகள் வேய்ந்த
  வயிரம்போழ்ந் துழுது சேந்த
பொன்னவிர் கழல்கொள் பாதம்
  பொழிமழைத் தடக்கை கூப்ப
வின்னுரை முகமன் கூறித்
  தானத்தி லிருக்க வென்றான்.

   (இ - ள்.) என் வரவு இசைக்க என்ன - சீதத்தனுடன் வந்த என் வருகையைக் கூறுக என்று தரன் கூற; வாயிலோன் இசைப்ப - வாயிற் காவலன் அரசனிடம் ஆணை பெற்று வந்து கூற; ஏகி - தரன் சென்று; மன்னர் தம் முடிகள் வேய்ந்த வயிரம் போழ்ந்து உழுது சேந்த - அரசர்கள் தங்கள் முடிகளிலே அணிந்த வயிரங்கள் கீறி உழுதலிலே சிவந்த; பொன் அவிர் கழல் கொள் பாதம் - பொன் விளங்கும் கழலணிந்த அடிகளிலே; பொழி மழைத் தடக்கை கூப்ப - பெய்யும் முகிலனைய பெரிய கைகளைக் குவிக்க; இன் உரை முகமன் கூறி - (மன்னவன்)