பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 319 

அவிழ் கைதை வேலி காசு இல் காந்தார நாட்டு - தேன் சொரியும் தாழை வேலியையுடைய குற்றமற்ற காந்தாரம் என்னும் நாட்டிலே; புள் அணி கிடங்கின் விச்சா லோக மாநகரின் போகா - பறவைகள் தங்கிய அகழியையுடைய வித்தியாதர உலகப் பெருநகரிலே நீங்காமலிருக்கின்ற; வெள்ளிவேல் கலுழ வேகன் வேதண்ட வேந்தர் வேந்தன் - வெண்மையான வேலேந்திய கலுழ வேகன் என்பான் மலையரசர்கட் கெல்லாம் அரசன் ஆவான்.

 

   (வி - ம்.) வேதண்டம் - மலை. வீவில் - அழிவில்லாத. 'தென் சேடி வெள்ளி வேதண்டம்' என்பது தொடங்கி அடுத்த செய்யுளில் 'அறிமின்' என்பதீறாகச் சீதத்தன் தன் பாட்டன் கூற்றைக் கொண்டு கூறுகின்றான்.

 

   கைதை - தாழை. விச்சாலோகம் - வித்தியாதர வுலகம். வேதண்டவேந்தர் - மலையரசர்.

( 54 )
547 சங்குடைந் தனைய வெண்டா
  மரைமலர்த் தடங்கள் போலும்
நங்குடித் தெய்வங் கண்டீர்
  நமரங்கா ளறிமி னென்னக்
கொங்குடை முல்லைப் பைம்போ
  திருவடங் கிடந்த மார்ப,
விங்கடி பிழைப்ப தன்றா
  லெங்குல மென்று சொன்னான்.

   (இ - ள்.) நமரங்காள்! - சுற்றத்தவர்களே!; சங்கு உடைந்த அனைய வெண்தாமரை மலர்த் தடங்கள் போலும் - சங்கு விரிந்தாலனைய வெண்தாமரை மலர்கள் நிறைந்த குளங்கள் போன்ற; நம் குடித் தெய்வம் அறிமின் என்ன - நம் குடிக்கு (அக்கலுழ வேகன்) தெய்வம் என அறியுங்கோள் என்று கூறியதால்; கொங்கு உடை முல்லைப் பைம்போது இரு வடம் கிடந்த மார்ப - மணமுடைய புதிய முல்லைமலரால் ஆகிய இரண்டு மாலைகள் தங்கிய மார்பனே!; எம்குலம் இங்கு அடி பிழைப்பது அன்று என்று சொன்னான் - எம் மரபு இவ்விடத்து நின் திருவடிக்குத் தவறு செய்யாது என்று (சீதத்தன் ) கூறினான்.

 

   (வி - ம்.) 'சங்குடைந்தனைய வெண்டாமரை மலர்த் தடங்கள் போலும் நங்குடி' என்பதற்குத், ”தடங்களிலே உடைந்த தன்மையவாகிய மலரும் சங்கும் போலும் நம் குடி. இது தூய்மைக்கு உவமை. இனி, சங்கு சுட்டாலும் நிறங் கெடாததுபோலக் கெட்டாலும் தன் தன்மை கெடாத குடியுமாம். 'நத்தம்போற் கேடும்' (குறள் - 235) என்ப” என்று விளக்கங் கூறுவர் நச்சினார்க்கினியர். 'சங்கு உடைந்