பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 32 

உறீஇ - முழங்குமாறு ஏரிற் பூட்டி; பொறிவரி வரால் இனம் இரிய உடன்புக்கு -புள்ளிகளையும் வரிகளையும் உடைய வராலின் திரள் ஓட அவற்றுடன் புகுந்து; வெறிகமழ் கழனியுள் உழுநர் வெள்ளம் - மணங்கமழும் கழனியில் உழுகின்றவர் வெள்ளம் என்னும் எண்ணிக்கை உடையவர் ஆயினர்.

 

   (வி - ம்.) சிலம்ப - முழங்க . பொறி - விளக்கம்.

 

   'ஏற்புடைத் தென்ப எருமைக் கண்ணும்' (தொல்-மரபு. 37) என்பதனால் 'ஒருத்தல்' என்றார்.

( 15 )
45 சேறமை செருவினுட் செந்நெல் வான்முளை
வீறொடு விளைகெனத் தொழுது வித்துவார்
நாறிது பதமெனப் பறித்து நாட்செய்வார்
கூறிய கடைசியர் குழாங்கொண் டேகுவார்.

   (இ - ள்.) வீறொடு விளைக எனத் தொழுது -(உழவர்கள்) சிறப்புற விளைக என்று நிலமகளைத் தொழுது; சேறு அமை செருவினுள் செந்நெல் வால்முளை வித்துவார்- சேறாக அமைந்த வயலிலே செந்நெல்லின் வெள்ளிய முளையை விதைப்பர்; இது நாறு பதம் எனப்பறித்து நாள்செய்வார் - இந் நாற்றுச் செவ்வி பெற்றது என்று பறித்து நாள்கொண்டு வைப்பர்; கூறிய கடைசியர் குழாம்கொண்டு ஏகுவர்-முதல் நாளிலேயே கூறி அமர்த்தப்பட்ட உழத்தியர் திரளை அழைத்துச் செல்வர்.

 

   (வி - ம்.) இத்துணை நிலத்திற்கு இத்துணைக் கடைசியர் என்று கூறிய என்றும் ஆம்:

( 16 )
46 முலைத்தடஞ் சேதகம் பொறிப்ப மற்றவர்
குலைத்துடன் பதித்தலிற் குதித்த வாட்கயல்
புலத்திடைக் கவரிகன் றூட்டப் போந்தபா
னிலத்திடைப் பாய்ந்தவை பிறழு நீரவே.

   (இ - ள்.) முலைத்தடம் சேதகம் பொறிப்ப - தங்கள் முலைப்பரப்பிலே சேறு தெறிக்க; அவர் குலைத்து உடன்பதித்தலின் - அக்கடைசியர் நாற்றின் முடியைப் பிரித்து எல்லோரும் நடுதலின்; குதித்த வாள்கயல் - வெருவி நடாத இடத்தே குதித்த ஒளிமிகுங் கயல் மீன்கள் ; புலத்திடைக் கவரி கன்று ஊட்டப் போந்த பால் நிலத்திடைப் பாய்ந்து - (அக்கடைசியர் நெருங்குதலின்) குறிஞ்சி நிலத்திலே கவரி தன் கன்றை யூட்டி மிகுந்து சொரிந்த பால் மறைத்த நிலத்திலே பாய்ந்து; அவை பிறழும் நீர- அவை அந்நிலத்திலே கிடந்து பிறழும் இயல்பின அந்நிலம்.

 

   (வி - ம்.) மற்று : வினைமாற்று . குறிஞ்சி நிலத்தே கவரி தன் கன்றை ஊட்டுதலான் அதற்கு மிக்குச் சொரிந்த பால் மறைத்த நிலத்