காந்தருவ தத்தையார் இலம்பகம் |
320 |
|
தனைய வெண்டாமரை மலர்' என்பதற்கு வலிந்து கூறும் அப்பொருள், இன்றி அமையாததன்று, வெண்டாமரை மலர்த்தடமே குலத்தூய்மைக்குக் கொள்வதால் உவமைக்கு உவமையன்று. அரச முல்லையும் காவல் முல்லையுங் கருதி 'இருவடம்' என்றார். சீதத்தன் கலுழ வேகனை நோக்கி, 'எம் பாட்டன் இங்ஙனம் நின்னைத் தெய்வம் என்று கொள்ளுமாறு கூறியுள்ளான். ஆதலால், எங்குடி நின் அடிக்குப் பிழைப்பதன்று' என்றான்.
|
|
கண்டீர் : முன்னிலையசை. நச்சினார்க்கினியர், 'காணுங்கோள்' எனப் பொருள் கூறுவர். 'அறிமின்' என மேலே வருவதால் அது அத்துணைச் சிறப்பன்று. நமரங்காள்: நமர் அம் காள் : அம் : அசை.
|
|
சங்குடைந்தனைய வெண்டாமரை மலர்த்தடம் என்புழி, வெண்டாமரை தடத்திற்கு அடைமாத்திரையாய் வந்ததாகலின் சங்குடைந்தனைய என்னும் உவமை உவமைக்குவமையன்று; ஈண்டு ஆசிரியர் உவமையாக எடுத்த பொருள் தடம் மட்டுமே என்க. தடம் சிறப்புப் பற்றி வந்த உவமை.
|
( 55 ) |
548 |
பெருந்தகைக் குருசி றோழன் |
|
பெருவிலைக் கடக முன்கை |
|
திருந்துபு வணங்கப் பற்றிச் |
|
சென்றுதன் னுரிமை காட்டப் |
|
பொருந்துபு பொற்ப வோம்பிப் |
|
பொன்னிழை சுடர நின்ற |
|
கருங்கண்ணி திறத்து வேறாக் |
|
கட்டுரை பயிற்று கின்றான். |
|
(இ - ள்.) பெருந்தகைக் குருசில் தோழன் பெருவிலைக் கடகம் முன்கை திருந்துபு வணங்கப் பற்றி சென்று-பெருமை தங்கிய அம்மன்னன் (சீதத்தன் கூறியவற்றைக் கேட்டு) அந்தச் சீதத்தனின் விலைமிகுங் கடகம் அணிந்த முன்கையைச் செவ்வையாகப் பற்றி அழைத்துச் சென்று; தன் உரிமை காட்ட - தன் மனைவிக்கு இவனைக் காட்டினானாக; பொருந்துபு பொற்ப ஓம்பி - அவளும் இவனுக்குத் தகவாக அழகுற உபசரித்தாளாக; பொன் இழை சுடர நின்ற கருங்கண்ணி திறத்து - அங்குப் பொன்னணி ஒளிர நின்ற கரிய கண்களையுடைய தத்தையின் சார்பாக; வேறாக் கட்டுரை பயிற்றுகின்றான் - வேறாகக்கொண்டு உறுதியுரையைக் கலுழ வேகன் கூறத்தொடங்கினான்.
|
|
(வி - ம்.) ஓம்பி - ஓம்ப : வினையெச்சத் திரிபு.
|
|
உரிமைகாட்ட என்றது சீதத்தனுக்குத் தன் மனைவியைக் காட்ட என்றவாறு. இங்ஙனம் காட்டுதல் நட்புக்கிழமைக்கு அறிகுறி என்க.
|
|