காந்தருவ தத்தையார் இலம்பகம் |
321 |
|
இதனை,
|
|
|
”யாமாயின் எம்மில்லங் காட்டுதும் தாமாயின் |
|
|
காணவே கற்பழியும் என்பார்போல் - நாணிப் |
|
|
புறங்கடை வைத்தீவர் சோறும் அதனால் |
|
|
மறந்திடுக செல்வர் தொடர்பு” (நாலடி. 293) |
|
என வரும் நாலடியானும் உணர்க. (நச்சினார்க்கினியர் கருத்தும் இதுவே.) இது காறும் முகமன் மொழிந்த கலுழவேகன் கண்ணிதிறத்து இப்போது காரியம் பேசினான் என்பார் வேறாகக் கட்டுரை பயிற்றுகின்றான் என்றார். வேறா - வேறாக
|
( 56 ) |
549 |
எரிமணிப் பளிக்கு மாடத் |
|
தெழுந்ததோர் காம வல்லி |
|
யருமணிக் கொடிகொன் மின்கொ |
|
லமரர்கோ னெழுதி வைத்த |
|
வொருமணி குயின்ற பாவை |
|
யொன்று கொலென்று நாய்கன் |
|
றிருமணிக் கொடியை யோரான் |
|
றெருமர மன்னன் சொன்னான். |
|
(இ - ள்.) எரிமணிப் பளிக்கு மாடத்து எழுந்தது ஓர் காம வல்லி அருமணிக் கொடிகொல்! - ஒளிவிடும் மணிகள் இழைத்த இப் பளிங்கு மாடத்திலே தோன்றியதான ஒப்பற்ற காம வல்லியாகிய அரிய மாணிக்கக் கொடியோ!; மின்கொல்! - மின் கொடியோ! அமரர்கோன் எழுதி வைத்த ஒரு மணி குயின்ற பாவை ஒன்றுகொல்! - வானவர் தலைவன் தன் உள்ளத்தில் எழுதி வைத்த ஒப்பில்லாத மணியினால் இயற்றப் பெற்ற ஒரு பாவையோ!; என்று - என; திருமணிக் கொடியை ஓரான் நாய்கன் தெருமர - அழகிய மணிக்கொடி போன்ற தத்தையை மகளென்று அறியானாகி வணிகன் கலக்கமுற; மன்னன் சொன்னான் - அரசன் கூறினான்.
|
|
(வி - ம்.) 'கலுழவேகன் தன் மனைவியிடம் அழைத்துச் சென்று சீதத்தனை அறிமுகஞ் செய்து வைத்தான். அவளும் சீதத்தனுக்கு முகமன் செய்தாள். அப்போது அங்கே நின்ற தன் மகளைப் பற்றிக் கலுழவேகன் சீதத்தனுக்குக் கூறத் தொடங்கியபோது அவளைப் பார்த்த சீதத்தன் தெருமரலுற்றான். அவனைத் தேற்ற அரசன் கூறுகின்றான்' என்று முற்செய்யுளுக்கும் இச் செய்யுளுக்குந் தொடர்பு கொள்க.
|
|
நாய்கன் சுழலாநிற்ப அவனுக்கு மன்னன் சொன்னான் என்க.
|
( 57 ) |