காந்தருவ தத்தையார் இலம்பகம் |
322 |
|
550 |
தூசுலாய்க் கிடந்த வல்கு |
|
றுப்புறழ் தொண்டைச் செவ்வாய் |
|
வாசவான் குழலின் மின்போல் |
|
யருமணிக் கொடிகொன் மின்கொ |
|
யூசல்பாய்ந் தாடிக் காதிற் |
|
குண்டல மிலங்க நின்றாள் |
|
காசில்யாழ்க் கணங்கொள் தெய்வக் |
|
காந்தர்வ தத்தை யென்பாள். |
|
(இ - ள்.) தூசு உலாய்க் கிடந்த அல்குல் - ஆடை சூழ்ந்து கிடந்த அல்குலையும்; துப்பு தொண்டை உறழ் செவ்வாய் - பவளத்தையும் கொவ்வைக் கனியையும் மாறு கொண்ட செவ்வாயினையும் (உடையளாய்): வாசம் வான் குழலின் மின்போல் - மணம் பொருந்திய குழலையுடைய மின் கொடிபோல்; வருமுலைச் சாந்து நக்கி ஊசல் பாய்ந்து ஆடிக் காதில் குண்டலம் இலங்க நின்றாள் - வளரும் முலையிற் பூசிய சாந்தைத் தொட்டுப் பாய்ந்து ஊசலாடிக் காதிலே குண்டலம் விளங்க நின்றவள்; காசுஇல் யாழ்க்கணம் கொள் தெய்வக் காந்தருவதத்தை என்பாள் - குற்றமற்ற யாழ்க்கலைத் தொகுதியைக் கொண்ட தெய்வமாகிய மாதங்கியைப் போன்ற காந்தருவதத்தை எனப்படுவாள்.
|
|
(வி - ம்.) ”நாணால் இறைஞ்சி நிற்றலிற் குண்டலம் சாந்தைத் தீண்டிப் போக்குவரவுடைத்தாய் அசைந்து இலங்க நின்றாள்” என்பர் நச்சினார்க்கினியர். மேலும் ”யாழ்விச்சைத் தொகுதி கொண்ட தெய்வம் - மாதங்கி” என்றுங் கூறுவர்.
|
( 58 ) |
551 |
விளங்கினா ளுலக மெல்லாம் |
|
வீணையின் வனப்பி னாலே |
|
யளந்துணர் வரிய நங்கைக் |
|
கருமணி முகிழ்த்த வேபோ |
|
லிளங்கதிர் முலையு மாகத் |
|
திடங்கொண்டு பரந்த மின்னிற் |
|
றுளங்குநுண் ணுசுப்புந் தோன்றா |
|
துரவரு வென்ன வுண்டே. |
|
(இ - ள்.) வீணையின் வனப்பினாலே உலகம் எல்லாம் விளங்கினாள் - இவள் வீணையினாலும் அழகினாலும் உலகெங்கும் விளக்க முற்றாள்; அளந்து உணர்வு அரிய நங்கைக்கு - பண்பினை அளந்து அறியவியலாத இப் பெண்ணுக்கு; அரு மணி முகிழ்த்தவேபோல் இளங்கதிர் முலையும் ஆகத்து இடம் கொண்டு பரந்த -
|
|