பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 323 

முன்னர் அரிய மணிகள் தோன்றினபோல விளங்கிய இளமை பொருந்திய கதிர்த்த முலைகள் இப்போது மார்பெலாம் இடமாகக் கொண்டு பரவின; மின்னின் துளங்கும் நுண் நுசுப்பும் தோன்றாது உரு அரு என்ன உண்டு - முன்னர் மின்கொடி போல அசையும் நுண்ணிய இடையும் இப்போது காணப்படாமல் உண்டு இல்லை என ஐயம் நிகழுமாறு உள்ளது.

 
 
552 நின்மக ளிவளை நீயே நின்பதிக் கொண்டு போகி
யின்னிசை பொருது வெல்வா னியாவனே யானு மாக
வன்னவற் குரிய ளென்ன வடிப்பணி செய்வ லென்றான்
றன்னமர் தேவி கேட்டுத் தத்தைக்கே தக்கதென்றாள்.

   (இ - ள்.) நின் மகள் இவளை நீயே நின்பதிக் கொண்டு போகி - இவள் நின் மகளாவாள் இவளை நீ நின் நகர்க்குக் கொண்டு சென்று: இன் இசை பொருது வெல்வான் யாவனே யானும் ஆக - இனிய இசையாற் பொருது வெல்பவன் எவனேயெனினும் ஆக; அன்னவற்கு உரியள் என்ன - அவனுக்கு இவள் உரியவள் என்று கொடுப்பாய் எனக் கலுழவேகன் கூற; அடிப்பணி செய்வல் என்றான் - நின் திருவடித் தொண்டு செய்வேன் என்று சீதத்தன் கூறினான்; தன் அமர்தேவி கேட்டு - கலுழவேகனின் விருப்பத்துக்குரிய மனையாள் அதைக் கேட்டு; தத்தைக்கே தக்கது என்றாள் - இவ்விழிதகவு இவளுக்கே உரியது என்று வருந்திக் கூறினாள்.

 

   (வி - ம்.) போகி - போக என வியங்கோளுமாம். 'யாவன்' என்பது எக்குலத்தினோனுமாக என்பது குறித்து நின்றது. உரியள் எனவே கொடைப் பொருளாயது. அடிமைப் பணி என்பது விகாரப்பட்டது அடிப்பணி செய்வல் என்றது அங்ஙனமே செய்வேன் என்றவாறு. தத்தைக்கே தக்கது என்புழித் தக்கது என்றது குறிப்பு மொழி; அவட்கிது தகுதியாகாது என்று வருந்தியபடியாம்.

( 60 )
553 முனிவரும் போக பூமிப் போகம்முட் டாது பெற்றுந்
தனியவ ராகி வாழ்தல் சாதுய ரதனி னில்லை
கனிபடு கிளவி யார்தங் காதலர் கவானிற் றுஞ்சிற்
பனியிரு விசும்பிற் றேவர் பான்மையிற் றென்று சொன்னான்.

   (இ - ள்.) (அதுகேட்ட மன்னன்); கனிபடு கிளவியார் - கனியனைய மொழியுடைய மகளிர்; முனிவு அரும் போக பூமிப் போகம் முட்டாது பெற்றும் - வெறுப்பற்ற இன்பவுலகிலே இன்பத்தைத் தடையின்றிப் பெற்றாலும்; தனியவர் ஆகி வாழ்தல் அதனின் சாதுயர் இல்லை - தனித்தவராகி வாழ்வதினும்