பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 324 

இறந்துபடும் வருத்தம் பிறிதின் இல்லை; தம் காதலர் கவானில் துஞ்சின் - அவர்தம் கணவரின் துடையிலே துயிலப் பெறின்; பனி இரு விசும்பின் தேவர் பான்மையிற்று - குளிர்ந்த பெரிய வானுலகிலே வானவரின்பத்தின் பான்மையுடையது; என்று சொன்னான் - என்று கூறினான்.

 

   (வி - ம்.) இச்செய்யுளும் (554) அடுத்து வருவதும் ”தத்தைக்கே” என்று வருந்திய தன்மனைவி தாரணிக்குக் கூறியன. பெற்றும் - பெற்றவிடத்தும். சாதுயர் - இறத்தலால் வரும் துன்பம். அதனில் - அத்தனித்த வாழ்வினுங் காட்டில்.

( 61 )
554 நூற்படு புலவன் சொன்ன
  நுண்பொரு ணுழைந்தி யானும்
வேற்கடற் றானை வேந்தர்
  வீழ்ந்திரந் தாலு நேரேன்
சேற்கடை மதர்வை நோக்கிற்
  சில்லரித் தடங்க ணங்கை
பாற்படு காலம் வந்தாற்
  பான்மையார் விலக்கு கிற்பார்.

   (இ - ள்.) நூல்படு புலவன் சொன்ன நுண்பொருள்யானும் நுழைந்து - நூலுணர்ந்த கணி கூறிய நுண்ணிய பொருளை யானும் நுணுகி ஆராய்ந்ததனால்; வேல் கடல் தானை வேந்தர் வீழ்ந்து இரந்தாலும் நேரேன் - வேலேந்திய கடலனைய படையுடைய வேந்தர் விரும்பி இரந்தாலும் ஒவ்வேனாயினேன்; சேல்கடை மதர்வை நோக்கின் சில் அரித் தடங்கண் நங்கை - சேலின் கடை போன்ற கடையினையும் நோக்கினையும் சிலவாகிய செவ்வரியினையும் உடைய பெரிய கண்ணினள் ஆன இவளுக்கு; பால்படு காலம் வந்தால் - ஒருவன்பால் அடையும் காலம் வந்ததாயின்; பான்மை யார் விலக்குகிற்பார் - அவ்வூழை எவர் தாம் விலக்க வல்லவர்? (ஆதலின் நேர்ந்தேன்).

 

   (வி - ம்.) நூற்படுபுலவன் என்றது கணியை. மதர்வை நோக்கு - மயக்கந்தரும் பார்வை. பால் - (ஒருவன்) பக்கலிலே. பான்மை - ஊழ்வினை. ஆதலின் அதற்கு நேர்ந்தேன் என்பது எச்சப் பொருள்.

( 62 )
555 படைப்பருங் கற்பி னாடன்
  பாவையைப் பரிவு நீக்கிக்
கொடைக்குரிப் பால வெல்லாங்
  கொடுத்தபின் கூற்று முட்கும்