பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 325 

555 விடைப்பருந் தானை வேந்தன்
  வேண்டுவ வெறுப்ப நல்கித்
தொடுத்தலர் கோதை வீணா
  பதிக்கிது சொல்லி னானே.

   (இ - ள்.) படைப்பு அருங்கற்பினாள் - (அது கேட்ட) (பிறராற்) படைத்தற்கரிய கற்புடைய தாரணி: தன் பாவையைப் பரிவு நீக்கி-தன் மகளின் வருத்தத்தை நீக்கி; கொடைக்கு உரிப்பால எல்லாம் கொடுத்தபின் - கொடுத்தற்குரியன வெல்லாம் கொடுத்த பிறகு; கூற்றும் உட்கும் விடைப்பு அருந்தானை வேந்தன் - கூற்றுவனும் அஞ்சும் (பிறரால்) வேறுபடுத்தற்கரிய படையினையுடைய வேந்தன்; வேண்டுவ வெறுப்ப நல்கி - (தத்தைக்கு) வேண்டுமவற்றை மிகுதியும் நல்கி; தொடுத்து அலர்கோதை வீணாபதிக்கு இது சொல்லினான் - தொடுத்து மலர்ந்த மாலையையுடைய வீணாபதியை நோக்கி இதனைக் கூறினான்.

 

   (வி - ம்.) கணவன் கருத்தே தன் கருத்தாதலின், பிறர் படைத்தற்கரிய கற்பாயிற்று.

 

   கற்பினாள் - தாரணி. பாவை : உவமவாகுபெயர்; காந்தருவதத்தை. விடைப்பு - வேறுபடுத்தல். வெறுப்ப - மிக : உரிச்சொல். வீணாபதி - ஒருபேடி.

( 63 )
556 உடம்பினொ டுயிரிற் பின்னி
  யொருவயி னீங்கல் செல்லா
நெடுங்கணுந் தோளும் போலு
  நேரிழை அரிவை நீநின்
றடங்கணி தனிமை நீங்கத்
  தந்தையுந் தாயு மாகி
யடங்கல ரட்ட வேலா
  னாணையி ராமி னென்றான்.

   (இ - ள்.) உடம்பினோடு உயிரின் பின்னி - உடம்பும் உயிரும் போல ஒன்றி; ஒருவயின் நீங்கல் செல்லா நெடுங்கணும் தோளும் போலும் நேரிழை அரிவை - ஓரிடத்தும் நீங்காமல் நீண்ட கண்கள் போலவும் தோள்கள் போலவும் உறுதுணைபுரியும் அழகிய அணியுடைய அரிவையே!; நீ நின் தடங்கணி தனிமை நீங்க - நீ உன்னுடைய பெருங்கண்ணியின் தனிமை விலக; தந்தையும் தாயும் ஆகி - தந்தையும் தாயுமாகுக! அடங்கலர் அட்ட வேலான் ஆணையிர் ஆமின் என்றாள் - பின்னர், நீவிர் இரு