காந்தருவ தத்தையார் இலம்பகம் |
326 |
|
வரும் பகைவரை வென்ற வேலானான சீதத்தனின் ஆணைப்படி நடப்பீராக என்றான்.
|
|
(வி - ம்.) 'ஆகி' என்பதற்கு 'ஆய்' என எச்சப்பொருள் கொள்வதும் ஒன்று.
|
|
இது கலுழவேகன் காந்தருவதத்தையை வீணாபதியிடம் ஓம்படை செய்தது. உரிமை தோன்ற நின் தடங்கண்ணி என்றான். வேலான் - சீதத்தன். ஆணையிர் - ஆணையையுடையீர்.
|
( 64 ) |
557 |
அருமணி வயிரம் வேய்ந்த |
|
வருங்கலப் பேழை யைஞ்ஞூ |
|
றெரிமணி செம்பொ னார்ந்த |
|
விராயிரம் யவனப் பேழை |
|
திருமணிப் பூணி னாற்குச் |
|
சினந்தலை மழுங்க லின்றிக் |
|
குருமணி முடியிற் றேய்த்த |
|
தரன்றமர் கொள்க வென்றான். |
|
(இ - ள்.) அருமணி வயிரம் வேய்ந்த அருங்கலம் பேழை ஐஞ்ஞூறு - அரிய மணிகளும் வயிரமும் இழைத்த அரிய அணிகலப் பெட்டி ஐந்நூறும்; எரி மணி செம்பொன் ஆர்ந்த யவனப் பேழை இராயிரம் - ஒளிவிடும் மணியும் செம்பொன்னும் நிறைந்த யவன நாட்டுப் பெட்டி இரண்டாயிரமும் (கொடுத்து) திருமணிப் பூணினாற்குச் சினம் தலைமழுங்கல் இன்றிக் குருமணி முடியின் தேய்த்த - அழகிய மணிக்கலன்களையுடைய கலுழவேகற்குப் பகைவர்மேற் சினம் கெடுதல் இல்லாமையால், அவர்களுடைய நிறமிகும் மணிமுடியை அவன் அடியிலே தேய்ப்பித்த; தரன் தமர் கொள்க என்றான் - தரன் சுற்றத்தையும் கொள்க என்று கொடுத்தான்.
|
|
(வி - ம்.) யவனப் பேழை - யவன நாட்டிற் செய்த பேழை. பூணினான் - கலுழவேகன். முடியிற் குருமணி என மாறி அவன் அடியில் என வருவித்து முடிக்க.
|
( 65 ) |
558 |
பல்வினைப் பவளப் பாய்காற் |
|
பசுமணி யிழிகை வம்பார் |
|
நல்லகில் விம்மு கட்டி |
|
றவிசொடு நிலைக்கண் ணாடி |
|
மெல்லிய தூப முட்டி |
|
மேதகு நானச் செப்போ |
|
டல்லவுங் கொள்க வென்றா |
|
னணங்குடை நிணங்கொள் வேலான். |
|