பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 331 

புனை யூகம் மந்தி - பொன் அணி அணிந்த கருங்குரங்கும் பெண் குரங்கும்; பொறி மயிர்ப் புறவம் - புள்ளிகளாக மயிர் பொருந்திய புறாவும்; மென்புனம் மருளின் நோக்கின் பொன் ஆர் மானினம் - மென்மையான புனத்துக்குரிய மருண்ட இனிய நோக்குக் கொண்ட, பொன்னிறம் பொருந்திய மான்திரள்; ஆதி ஆக - முதலாக; தன் புறம் சூழப் போகி - தன் பக்கலிலே சூழச் சென்று; விமானம் தளிரியல் சேர்ந்தாள் - விமானத்தைத் தளிரனைய மெல்லியளாம் தத்தை அடைந்தாள்.

 

   (வி - ம்.) மந்தி: பெண்பெயர்; 'குரங்கு முசுவும் ஊகமும் மந்தி' (தொல்-மரபு. 67) என்றார். புறவம் - சித்திரப் புறா.

 

   இதிற் கூறப்பட்டவற்றுள் அன்னம் கிளி மஞ்ஞை என்னும் மூன்றும் தத்தையால் வளர்க்கப்பட்ட பறவைகள், யூகம் மந்தி புறவம் மானினம் முதலியன பொன்னாற் செய்யப்பட்டவை எனக் கொள்க. இவ்வேற்றுமை தோன்றவே ஆசிரியர் பொன்புனை யூகம். மந்தி புறவம் என்றும், பொன்னார் மானினம் என்றும் அடைபுணர்த்தோதினர் என்க. சிற்பத்திறன் தெரித்தோதுவார், பொறி மயிர்ப்புறவம், மருள் இன்னோக்கின் மானினம் என்றுங் கூறினர்.

( 72 )

வேறு

 
565 வெற்றிவேன் மணிமுடிக், கொற்றவ னொருமக
ளற்றமில் பெரும்படைச், சுற்றமோ டியங்கினாள்.

   (இ - ள்.) வெற்றிவேல் மணிமுடிக் கொற்றவன் ஒரு மகள் - வென்றி வேலையும் மணிமுடியையும் உடைய வேந்தனின் தனி மகள்; அற்றம் இல் பெரும்படை - நீங்குதல் இல்லாத பெரும் படையாகிய; சுற்றமோடு இயங்கினாள் - சுற்றத்துடன் சென்றாள்.

 
565 வெற்றிவேன் மணிமுடிக், கொற்றவ னொருமக
ளற்றமில் பெரும்படைச், சுற்றமோ டியங்கினாள்.
566 கண்ணயற் களிப்பன, வண்ணல்யானை யாயிரம்
விண்ணகத் தியங்குதே, ரெண்ணவற் றிரட்டியே.

   (இ - ள்.) கண் அயல் களிப்பன - கண் ணருகே மதமுடையனவாகிய; அண்ணல் யானை ஆயிரம் - பெருமை தங்கிய யானைகள் ஆயிரம்; விண் அகத்து இயங்கு தேர் எண் - வானிற் செல்லும் தேர்களின் எண்ணிக்கை; அவற்று இரட்டி - யானைகளினும் இருமடங்கு.

 

   (வி - ம்.) இரட்டி என்றது இரண்டாயிரம் என்றவாறு.

( 74 )
567 விற்படை விலக்குவ, பொற்படைப் புரவியு
முற்படக் கிளந்தவற்றி, னற்புடைய நாற்றியே