காந்தருவ தத்தையார் இலம்பகம் |
332 |
|
(இ - ள்.) விற்படை விலக்குவ - அம்பைத் தம் விரைவினால் விலக்குவனவாகிய; பொன் படைப் புரவியும் - பொன்னாற் செய்த கலணை முதலியவற்றையுடைய குதிரைகளும்; முன்படக் கிளந்தவற்றின் - முற்கூறிய யானைகளினும்; நாற்றி நல்புடைய - நான்கு மடங்குற்ற நல்ல பக்கத்தன.
|
|
(வி - ம்.) விற்படை - வில்லால் எய்யும் அம்பு. பொற்படை - பொன்னாற் செய்த கலணை முதலியன. ”பொலம்படை பொலிந்த...... புரவி”' என்றார், மலைபடுகடாத்தினும் (573). நாற்றி - நான்கு மடங்கு.
|
( 75 ) |
568 |
பாறுடைப் பருதிவேல், வீறுடை யிளையரு |
|
மாறிரட்டி யாயிரர், கூறுதற் கரியரே. |
|
(இ - ள்.) பாறு உடைப் பருதி வேல் - பருந்துகள் சூழும் ஒளிமிகு வேல் ஏந்திய; வீறு உடை இளையரும் - சிறப்புற்ற வீரர்களும்: ஆறு இரட்டி ஆயிரர் - பன்னீராயிரவர்; கூறுதற்கு அரியர் - அவர் செப்புதற்கு அரிய திறலுடையர்.
|
|
(வி - ம்.) 'கூறுதற்கு அரியர்' என்பதற்குப், 'பகைவர் வஞ்சினம் கூறுதற்கு அரியர்' என்பர் நச்சினார்க்கினியர்.
|
( 76 ) |
569 |
மாகநீள் விசும்பிடை, மேகநின் றிடித்தலி |
|
னாகநின் றதிர்ந்தவர்க், கேகலாவ தில்லையே. |
|
(இ - ள்.) மாகம் நீள் விசும்பிடை - திக்குகளில் நீண்ட வானத்திலே; மேகம் நின்று இடித்தலின் - முகில் மழை பெய்தற்கு இடித்ததால்; நாகம் நின்று அதிர்ந்து - யானைகள் (தம் இனத்தின் பிளிறுதல் என்று எண்ணி) நின்று தாமும் பிளிறுதலால்; அவர்க்கு ஏகல் ஆவது இல்லை - அவர்கட்குச் செல்ல முடிவதில்லை.
|
|
(வி - ம்.) தம் படைகளில் யானைகள் நிற்பதனால் இவர்கள் செல்ல முடியவில்லை. மாகம் - முகிலுமாம்; வானுக்கும் நிலத்துக்கும் இடையில் உள்ள இடம் என்பர் (பரி-1.47) பரிமேலழகர்.
|
|
நாகம் - யானை. அதிர்ந்து என்னும் எச்சத்தை அதிர எனச் செயவெனெச்சமாக்குக. அவர் - முற்கூறப்பட்ட வீறுடைய இளைஞர்.
|
( 77 ) |
570 |
வெஞ்சின வெகுளியிற், குஞ்சர முழங்கலி |
|
மஞ்சுதம் வயிறழிந், தஞ்சிநீ ருகுத்தவே. |
|
(இ - ள்.) குஞ்சரம் வெஞ்சினம் வெகுளியின் முழங்கலின் - யானை கொடிய சினமாகிய வெகுளியோடு முழங்குவதால்; மஞ்சு அஞ்சித் தம் வயிறு அழிந்து நீர் உகுத்த - முகில்கள் அச்ச முற்று வயிறு கலங்கி நீரைச் சொரிந்தன.
|
|