காந்தருவ தத்தையார் இலம்பகம் |
333 |
|
(வி - ம்.) முகில் முதலில் இடித்தது, பிறகு மழை பெய்தது என்பதாம்.
|
( 78 ) |
571 |
வேழமும் மதத்தொடு, தாழ்புயல் கலந்துட |
|
னாழ்கட லகம்புறம், வீழ்தர விரைந்ததே. |
|
(இ - ள்.) ஆழ்கடல் அகம் புறம் வீழ்தர - ஆழ்கடலின் நடுவு கரைக்குப் புறத்தே விழுமாறு; வேழம் மும்மதத்தொடு தாழ்புயல் கலந்து - யானைகளின் மும்மதத்துடன் தாழ்ந்த முகில் பெய்த நீருங் கலத்தலால்; விரைந்தது - முகிலாலும் களிறுகளாலும் தடையின்றி நாற்படையும் சென்றது.
|
|
571 |
வேழமும் மதத்தொடு, தாழ்புயல் கலந்துட |
|
னாழ்கட லகம்புறம், வீழ்தர விரைந்ததே. |
|
572 |
மல்லன்மாக் கடலிடைக், கல்லெனக் கலங்கவிழ்த் |
|
தல்லலுற் றழுங்கிய, செல்வனுற்ற செப்புவாம். |
|
(இ - ள்.) மல்லல் மாகடலிடை - வளமிகுந்த பெரிய கடலினிடையே; கல் என கலம் கவிழ்த்து - கல் எனும் வருத்த ஒலி எழக் கலத்தைக் கவிழ்த்து விட்டு; அல்லல் உற்று அழுங்கிய - துன்பம் உற்று வருந்திய; செல்வன் உற்ற செப்புவாம் - சீதத்தன் அடைந்தவற்றை இனி இயம்புவோம்.
|
|
(வி - ம்.) இது நூலாசிரியர் கூற்று - நுதலிப் புகுதல்.
|
( 80 ) |
573 |
பானிறப் பனிவரை, மேனிற மிகுத்தன |
|
நீனிற நிழன்மணி, தானிரைத் தகமெலாம். |
|
(இ - ள்.) பால் நிறப் பனிவரைமேல் - பால்போன்ற நிறமுடைய பனிமலையின் மேல்; நிறம் மிகுத்தன - நிறஞ் சிறந்த மணிகளையும்; நீல்நிற நிழல் மணி - நீல நிற ஒளி மணிகளையும்; அகமெலாம் நிரைத்து - கப்பலின் உட்புறம் எல்லாம் நிறைவித்து.
|
|
(வி - ம்.) சீதத்தன் அறியாமலே அவன் மரக்கலத்தே நிறைத்தான் தரன். இப் பாட்டுக் குளகம்.
|
( 81 ) |
574 |
வஞ்சமின் மனத்தினா, னெஞ்சகம் புகன்றுக |
|
விஞ்சையம் பெருமகன், வஞ்சமென் றுணர்த்தினான். |
|
(இ - ள்.) வஞ்சம் இல் மனத்தினான் நெஞ்சகம் - வெள்ளையுள்ளத்தவனாகிய சீதத்தனின் உள்ளம்; புகன்று உக - உவந்து உவகை ஒழுக; விஞ்சைஅம் பெருமகன் வஞ்சம் என்று - வித்தியாதரப் பெருமகனான தரன்; வஞ்சம் என்று உணர்த்தினான் - மாயை என்பதை விளக்கினான்.
|
|
(வி - ம்.) விளக்கினது மேல்வருஞ் செய்யுட்களிற் காண்க.
|
|