காந்தருவ தத்தையார் இலம்பகம் |
335 |
|
(இ - ள்.) துன்பம் உற்றவர்க்கு அலால் - துன்பம் அடைந்தவர்களுக்கே அல்லாமல்; இன்பம் இல்லை, ஆதலின் - (மற்றவர்கட்கு) இன்பம் கிடைப்பதில்லை ஆகையால்; அன்ப! யான் நினைத் துன்பத்தால் தொடக்கினேன் - அன்பனே நான் உன்னைத் துன்பத்தினாற் பிணித்தேன்.
|
|
(வி - ம்.) இக் கருத்தினைக் கம்பநாடர் தங் காவியத்தே பொன்போற் போற்றிப் பொதிந்துள்ளார். ”துன்புளதெனின் அன்றோ சுகமுளது” என்பது இராமாவதாரம் (கங்கைப். 69). அன்ப : விளி. தொடக்குதல்-பிணித்தல். நின்னுடைய இன்பத்தை மிகுதிப்படுத்தவே யான் இதனைச் செய்தேன் என்பது கருத்து.
|
( 87 ) |
580 |
பீழைசெய்து பெற்றனன், வாழியென்று மாக்கட |
|
லாழ்வித் திட்ட வம்பினைத், தோழர்ச்சுட்டிக் காட்டினான். |
|
(இ - ள்.) பீழை செய்து பெற்றனன் - உனக்கு வருத்தமுண்டாக்கி நின்னைத் தோழமை கொண்டேன்; வாழி என்று - (இனி நினக்குத் துன்பமின்றி) வாழ்க என்றுரைத்து; மாக்கடல் ஆழ்வித்திட்ட அம்பியைத் தோழர்ச் சுட்டிக் காட்டினான் - பெருங்கடலில் சீதத்தன் கண்ணுக்கு மட்டும் ஆழ்த்திய கலத்தையும் அவன் தோழரையும் (தீமையின்றியிருப்பதை) உணர்த்திக் காட்டினான்.
|
|
(வி - ம்.) சீதத்தனுடைய மரக்கலத்திலே மணிகளை நிறைவித்த தரன் பின்னர்த் தான் அவனை மாயத்தினாற் கொண்டு சென்றதைக் கூறிக் கலமும் தோழரும் தீதின்றியிருப்பதை உணர்த்தினான் என்க.
|
|
காரியமும் முற்றியதால் ஈண்டு உண்மையுரைத்தான் தரன்.
|
|
565 முதல் 580 வரை உள்ள செய்யுட்கள் குறளடி நான்காய் வந்த கொச்சக ஒருபோகு என்பர் நச்சினார்க்கினியர். 'நெய்யொடு தீயொக்க - செய்யானைச் சேர்வார்க்குப் - பொய்யாத வுள்ளமே - மெய்யாதல் வேண்டுமே' (தொல். செய்.149 மேற்) என்பதனை ஆதாரமாகக்காட்டுவர் அவர். பிற்காலத்திய பாவினத்தில் இது வஞ்சித்துறையாக அமையும்.
|
( 88 ) |
வேறு
|
|
581 |
தேன்றரு மாரி போன்று திவ்விய கிளவி தம்மா |
|
லூன்றரு குருதி வேலா னுள்ளகங் குளிர்ந்து விஞ்சைக் |
|
கோன்றரு துன்பம் மற்றென் குலத்தொடு முடிக வென்றான் |
|
கான்றுவில் வயிரம் வீசும் கனமணிக் குழையி னானே. |
|
(இ - ள்.) ஊன் தரு குருதி வேலான் - ஊன் சொரியும் குருதி தோய்ந்த வேலானாகிய; வயிரம் வில் கான்று வீசும் கன
|
|