காந்தருவ தத்தையார் இலம்பகம் |
336 |
|
மணிக் குழையினான் - வயிரம் ஒளியை உமிழ்ந்து வீசும் பருத்த மணியையுடைய குழையணிந்த சீதத்தன்; தேன் தரும் மாரி முகில் போன்று திவ்விய கிளவி தம்மால் உள் அகம் குளிர்ந்து - தேனைச் சொரியும் முகில் போன்று பெய்த இனிய மொழிகள் உள்ளத்திற் குளிர்ச்சியடைந்து; விஞ்சைக்கோன் தருதுன்பம் என் குலத்தோடு முடிக என்றான் - வித்தியாதர வேந்தன் தந்த இத்தன்மையான துன்பம் என் குலம் உள்ள அளவும் நடப்பதாக என்றான்.
|
|
(வி - ம்.) முன்னர்ச் சீதத்தனை நோக்கி (580) ”பீழை செய்து பெற்றனன்” என்ற தரன் கூறிய மொழியும் அதற்கு இத் ”துன்பம் மற்றென் குலத்தொடும் முடிக” என்று சீதத்தன் மறுமொழி கூறியதும் கற்றோர் நெஞ்சத்தை நெகிழ்க்கும் பேரின்பமுடையனவாதல் உணர்க.
|
( 89 ) |
582 |
தோடலர் தெரிய லான்றன் றோழரைக் கண்டு காத |
|
லூடலர்ந் தெழுந்து பொங்க வுருவத்தார் குழையப் புல்லிப் |
|
பாடிரும் பௌவ முந்நீர்ப் பட்டது பகர்த லோடு |
|
நாடக நாங்க ளுற்ற தென்றுகை யெறிந்து நக்கார். |
|
(இ - ள்.) தோடு அலர் தெரியலான் தன் தோழரைக் கண்டு - இதழ் விரிந்த மலர்மாலையானாகிய சீதத்தன் (பிறகு) தன் நண்பர்களைக் கண்டு; காதல் ஊடு அலர்ந்து எழுந்து பொங்க - காதலானது நெஞ்சிலே மலர்ந்து எழுந்து பொங்குதலால்; உருவத்தார் குழையப் புல்லி - அழகிய மாலை குழையுமாறு தழுவிக்கொண்டு; பாடு இரும் முந்நீர் பௌவம் பட்டது பகர்தலோடும் - ஒலி பொருந்திய பெரிய முத்தன்மையுறு கடலில் நேர்ந்ததை உரைத்தவுடன்; கையெறிந்து நக்கு நாடகம் நாங்கள் உற்றது என்றார் - கைகொட்டிச் சிரித்து நாங்கள் இங்ஙனம் ஒரு நாடகங் கண்டதுண்டு என்றனர்.
|
|
(வி - ம்.) நாடகம்போலக் காட்டியவன் தரன். உற்றதென்று கையெறிந்து நக்கார் என்பதனை ஆர்விகுதி பிரித்துக் கூட்டி 'உற்றதென்றார்' என முடிக்க.
|
|
நாடகம் நாங்கள் உற்றது என்றது யாங்கள் இந் நிகழ்ச்சியினைச் சிறிதும் கண்டிலேம் என்பதுபட நின்றது.
|
|
இப்பகுதியில் நூலாசிரியர் காட்டிய இம் முந்நீர்க் கலங்கவிழ் நிகழ்ச்சிக்கொப்பாக இனிமையுடைய பகுதி பிற இலக்கியங்களிலே காண்டற் கரிது.
|
( 90 ) |
583 |
கட்டழற் கதிய புண்ணிற் கருவரை யருவி யாரம் |
|
பட்டது போன்று நாய்கன் பரிவுதீர்ந் தினியர் சூழ |
|
மட்டவிழ் கோதை யோடு மண்கனை முழவ மூதூர்க் |
|
கட்டவிழ் தாரி னான்றன் கடிமனை மகிழ்ந்து புக்கான். |
|