| காந்தருவ தத்தையார் இலம்பகம் |
338 |
|
| 585 |
சந்திர காந்த மென்னுந் |
| |
தண்மணி நிலத்தி னங்கண் |
| |
வெந்தெரி பிசும்பொன் வெள்ளி |
| |
பளிங்கொடு பவளம் பாய்த்திக் |
| |
கந்தெரி மணியிற் செய்த |
| |
கன்னியா மாட மெய்திப் |
| |
பைந்தொடிப் பாவை யொன்றும் |
| |
பரிவிலள் வைகி னாளே. |
|
|
(இ - ள்.) சந்திர காந்தம் என்னும் தண்மணி நிலத்தின் அங்கண் - சந்திர காந்தம் என்னும் குளிர்ந்த மணியாலே செய்த நிலத்தினிடத்தில்; வெந்து எரி பசும்பொன் வெள்ளி பளிங்கொடு பவளம் பாய்த்தி - ஓட வைத்து விளங்கும் புதிய பொன்னாற் சுவர் அமைத்து வெள்ளியும் பளிங்கும் பவளமுங்கொண்டு பாய்ச்சி; எரி மணியில் கந்து செய்த - விளங்கும் மணியால் தூண் அமைத்த; கன்னியா மாடம் எய்தி - கன்னி மாடத்தை அடைந்து; பைந்தொடிப் பாவை ஒன்றும் பரிவு இலள் வைகினாள் - புதிய வளையல் அணிந்த தத்தை சிறிதும் வருத்தம் இல்லாதவளாக இருந்தாள்.
|
|
|
(வி - ம்.) பொன்னாற் சுவரும், மணியால் தூணும், பளிங்கினாற் கையலகும், பவளத்தாற் பூட்டும், வெள்ளியால் கூரையும் கொள்க.
|
|
|
சந்திரகாந்தம் - நிலவொளி பட்டவுடன் நீர் உமிழ்வதொரு மணி. கந்து - தூண். பாவை: காந்தருவதத்தை. பரிவிலள்: முற்றெச்சம்.
|
( 93 ) |
| 586 |
பாசிழைப் பரவை யல்குற் |
| |
பசுங்கதிர்க் கலாபம் வீங்கக் |
| |
காசுகண் பரிய வைகிக் |
| |
கடன்றலைக் கழிந்த பின்னாத் |
| |
தூசணி பரவை யல்குற் |
| |
றுளங்குநுண் ணுசுப்பிற் பாவை |
| |
யாசறு வரவும் தந்தை |
| |
வலித்தது மறியச் சொன்னான். |
|
|
(இ - ள்.) பாசிழை பரவை அல்குல் பசுங்கதிர்க் கலாபம் வீங்க - பதுமையின் புத்தணி யணிந்த பரப்புடைய அல்குலிலே புத்தொளி வீசும் கலாபம் விம்முதலால்; காசு கண்பரிய வைகி - அதில் மணிகள் அற்று வீழுமாறு கூடியிருந்து; கடன்தலை கழிந்த பின்னா - அவளிடத்து நிகழ்த்து முறையெல்லாம் அங்கே
|
|