காந்தருவ தத்தையார் இலம்பகம் |
339 |
|
கழிந்த பிறகு; தூசு அணி பரவை அல்குல் துளங்கும் நுண் நுசுப்பின் பாவை - ஆடையணிந்த பரப்புடைய அல்குலையும் அசையும் நுண்ணிய இடையையும் உடைய தத்தையின்; ஆசு அறு வரவும் தத்தை வலித்ததும் அறியச் சொன்னான் - குற்றம் அற்ற வரவையும் அவள் தந்தை விரும்பியதையும் விளங்கக் கூறினான்.
|
|
(வி - ம்.) கலாபம் - ஓரணிகலன். தந்தை வலித்தது - அவள் தந்தை இவளை யாழ் வென்றானுக்குக் கொடுக்க என்று துணிந்தது. அவட்குச் சொன்னான் என்க.
|
( 94 ) |
587 |
வண்டுண மலர்ந்த கோதை |
|
வாயொருப் பட்டு நேரத் |
|
தெண்கட லமிர்தம் பெய்த |
|
செப்பெனச் செறிந்து வீங்கிப் |
|
பெண்டிரு மாண்மை வெஃகிப் |
|
பேதுறு முலையி னாளைக் |
|
கண்டவர் மருள நாளைக் |
|
கடிவினை முடித்து மென்றான். |
|
(இ - ள்.) வண்டுண மலர்ந்த கோதை வாய் ஒருப்பட்டு நேர - வண்டுகள் தேனைப் பருகுமாறு மலர்ந்த மாலையினாள் ஆகிய பதுமை அவன் விருப்பத்துக்கு உடன்பட்ட அளவில்; தெண் கடல் அமிர்தம் பெய்த செப்பு எனச் செறிந்தது வீங்கி - தெளிந்த கடலின் அமிர்தத்தைப் பெய்த செப்புப்போல நெருங்கிப் பருத்து; பெண்டிரும் ஆண்மை வெஃகிப் பேது உறும் முலையினாளை - பெண்களும் ஆண்மையை விரும்பி மயங்குதற்குக் காரணமான முலையுடைய தத்தையை; கண்டவர் மருள - பார்த்தவர் மயங்குமாறு; நாளை கடிவினை முடித்தும் என்றான் - நாளைக்குத் திருமணம் புரிந்திடுவோம் என்ற சீதத்தன் செப்பினான்.
|
|
(வி - ம்.) கட்டியங்காரன் உடன்பட்ட பிறகே கடிவினை முடியுமாதலின், அவனை நாளை உடன்படுவிப்பேன் என்னுந் துணிவினால் இங்ஙனங் கூறினான்.
|
|
வாய் - ஈண்டு நெஞ்சிற்கு ஆகுபெயர். 165-ஆம் செய்யுட்குறிப்பைக் காண்க கடிவினை - திருமணம். பதுமையை உளப்படுத்தி முடித்தும் என்றான் என்க.
|
( 95 ) |
588 |
மால்வரை வயிறு போழ்ந்து |
|
வல்லவர் மதியிற் றந்த |
|
பால்வரை மணியும் பொன்னும் |
|
பற்பல கொண்டு புக்குக் |
|