| நாமகள் இலம்பகம் |
34 |
|
| 49 |
வளமுடி நடுபவர் வரம்பில் கம்பலை |
| |
இளமழை முழக்கென மஞ்ஞை யேங்கலி |
| |
னளமரு குயிலின மழுங்கிப் பூம்பொழி |
| |
லுளமெலி மகளிரி னொடுங்கு மென்பவே. |
|
|
(இ - ள்.) வளம்முடி நடுபவர் வரம்புஇல் கம்பலை - செழித்த நாற்றின் முடியை நடும் உழத்தியரின் எல்லையற்ற ஆரவாரத்தை; இளமழை முழக்குஎன மஞ்ஞை ஏங்கலின் - கார்காலத் தொடக்கத்திலே முகிலின முழக்கமென்று நினைத்து மயில்கள் ஆரவாரித்தலின் ; அளமரு குயில்இனம் அழுங்கி - உளஞ்சுழலும் குயிலின் திரள் (உண்மையென்று கருதி ) வருந்தி ; உளம்மெலி மகளிரின் பூம்பொழில் ஒடுங்கும் - (கணவரைப் பிரிந்து) உள்ளம் வருந்திய மகளிரைப்போலப் , பூஞ்சோலையிலே பதுங்கும்,
|
|
|
(வி - ம்.) கம்பலை - ஆரவாரம். ஏங்கல் - ஆரவாரித்தல்.
|
|
|
அளமரு :அலமரு : ளகர லகரப் போலி. குயில்: கார்காலத்தில் ஒடுங்கியிருக்கும்; வேனிலே இதற்குரியது. மயிலுக்குக் கார்காலமே விருப்பமூட்டும்.
|
( 20 ) |
| 50 |
வளைக்கையாற் கடைசியர் மட்டு வாக்கலிற் |
| |
றிளைத்தவர் பருகிய தேறற் றேங்குழிக் |
| |
களிப்பவுண் டிளவனங் கன்னி நாரையைத் |
| |
திளைத்தலிற் பெடைமயி றெருட்டுஞ் செம்மற்றே. |
|
|
(இ - ள்.) கடைசியர் வளைக்கையால் மட்டு வாக்கலின் - உழத்தியர் வளையணிந்த கையினால் மதுவை வார்த்தலால்; திளைத்தவர் பருகிய தேறல் தேங்குழி - தொழிலிலே இடைவிடாமல் பயின்றவர் உண்ட மது தேங்கிய இடத்திலே; இள அனம் களிப்ப உண்டு - காமஇன்பம் அறிந்த அன்னம் அதனை மயங்க உண்டு ; கன்னி நாரையைத் திளைத்தலின் - காமஇன்பம் அறியாத நாரையைக் கூடுதலின்; பெடைமயில் தெருட்டும் செம்மற்று - (அதனைக் கண்டு) மயிற்பெடை தன் மயிலைத் தெளிவிக்குந் தலைமைத்து.
|
|
|
(வி - ம்.) மீண்டும் நடவுத்தொழில் முதலாகக் கூறுகிறார் (45 - ஆம் செய்யுளில் முன் கூறினார்.)
|
|
|
'திளையா வரும் அருவி' (சிற்- 294) என்றார் பிறரும், பெடையென்றும் மயிலென்றும் பிரிக்க. நீர் கள்ளுண்டு இதுபோல் மயங்கன் மின் என்று தெருட்டிற்று. இனி, மயிலைக் கண்டாற் கள்ளின் களிப்புத் தீரும் என்றலின் அது தெருட்டிற் றென்றுமாம்.
|
|
|
தேங்கு உழி - தேங்கிய இடம். களித்தல் - கள்ளுண்டு மயங்குதல்,
|
( 21 ) |