காந்தருவ தத்தையார் இலம்பகம் |
340 |
|
588 |
கால்பொரு கழலி னானுங் |
|
காவலற் கண்டு சொன்னான் |
|
வேல்பொரு தானை யானும் |
|
வேண்டுவ விதியி னோ்ந்தான். |
|
(இ - ள்.) மால் வரை வயிறு போழ்ந்து வல்லவர் மதியின் தந்த பால்வரை மணியும் பொன்னும் - பெரிய மலைகளின் வயிற்றைப் பிளந்து நூல்வல்லார் தமது அறிவினாலே தந்த பகுதிப்பட்ட மணியும் பொன்னுமாக; பற்பல கொண்டு புக்கு- பலவற்றையும் கையுறையாகக்கொண்டு சென்று; காவலன கண்டு - அரசனைக் கண்டு; கால்பொரு கழலினானும் - காலிற் கட்டப்பட்ட கழலையுடையவனும்; சொன்னான் - (தன் விருப்பத்தைக்) கூறினான்; வேல் பொருதானை யானும் வேண்டுவ விதியின் நேர்ந்தான் - வேலினாற் பொரவல்ல படையினானும் அவன் விரும்பியவற்றை முறைப்படி ஒப்புக்கொண்டான்.
|
|
(வி - ம்.) விருப்பம்; மண்டபஞ் சமைத்தலும், யாவரும் வர முர சறைவித்தலும் முதலியன. சுயம்வரத்திற்கு அரசன் உடன்படவே வேண்டுதலின் 'விதியின்' என்றார்.
|
|
கழலினான் என்றது சீதத்தனை. தானையான் என்றது கட்டியங்காரனை.
|
( 96 ) |
வேறு
|
|
589 |
மையன்மத யானைநிரை மன்னன்மகிழ்ந் தானாப் |
|
பொய்யில்புகழ் நாய்கன்மத வொளியினொடு போகி |
|
நொய்தின்மனை யெய்தியிது செய்கென நொடித்தான் |
|
மொய்கொண்முலை பாயமுகை விண்டலர்ந்த தாரான். |
|
(இ - ள்.) மையல் மதயானை நிரை மன்னன் மகிழ்ந்து - செல்வச் செருக்குற்ற, மதயானை நிரைகளையுடைய வேந்தன் மகிழ்ந்ததனால்; ஆனாப் பொய்இல் புகழ் நாய்கன் மத ஒளியினொடு போகி - நிறைந்த உண்மையான புகழையுடைய வணிகன் மிகுதியான ஒளியுடன் சென்று; நொய்தின் மனை எய்தி - விரைவில் வீட்டை அடைந்து; மொய்கொண் முலைபாய முகைவிண்டு அலர்ந்த தாரான் - நெருங்கிய முலைகள் பாய்தலினாலே அரும்புகள் விரிந்து மலர்ந்த மாலையினான் ஆகிய அவன்; இது செய்க என நொடித்தான் - இதனைச் செய்க என்று கூறினான்.
|
|
(வி - ம்.) மையல் - செல்வச் செருக்கு. ஆனாப்புகழ்; பொய்யில் புகழ் எனத் தனித்தனி கூட்டுக. நொடித்தல் - சொல்லுதல். நாய்கனாகிய தாரான் என்க. மத - மிகுதிப் பொருள் குறித்ததோர் உரிச்சொல்.
|
|