(வி - ம்.) நானம் - புழுகு; குளித்தலாற் புழுகுடைத்தாயிற்று. 'வான் நக்கிடும்' என்பதற்கு 'வானைத் தீண்டும்' என்றும் பொருள் கொள்க. பூரட்டாதியின் நாலாங்காலும் உத்திரட்டாதியும் இரேவதியும் மீன ராசியாதலால், உத்திரட்டாதி நடுநாளாதலால், 'மீனத்திடைநாள்' என்றார். திருதியை, அட்டமி, திரயோதசி என்பவற்றில் திருதியை சிறத்தலின், 'சயை பக்கம்' என்றார். மேடத்தின் முற்கூறு மேடராசியின் கூறு; இரண்டாங் கூறு சிங்கராசியின் கூறு; மூன்றாங் கூறு தனுராசியின் கூறு. ஆதலால், மேடத்தின் நடுக்கூற்றைச் சிங்கத்தின் உதயமாக விதித்தார். இது கூறிற்று, சிங்கத்தே பிரகஸ்பதியாதலின். வெள்ளி முதல் வியாழ மீறாகக் கிழமை ஏழாயவாறும், உத்திரட்டாதி முதல் உரோகிணி யீறாக நாள் ஆறாயவாறும் கூடுமாறு என்னையெனின், இத் திங்களிற் சதயம் முதல் ஆயிலியத்தளவும் சந்திரன் வர்த்தித்து வருதலின், வியாக்கிழமைக்கு உரோகிணி கூடிற்று. இதனானே, மேல், 'ஒண்ணிற வுரோணியூர்ந்த ஒளிமதி ஒண்பொன் ஆட்சி' (சீவக. 620) என்று வியாழக்கிழமையிலும் சிறிது நாழிகை உரோகிணியாகக் கூறினார்.
|
|