காந்தருவ தத்தையார் இலம்பகம் |
342 |
|
(இ - ள்.) நன்பொன் விளைகழனி பட்டினொடு பஞ்சு துகில் பைம்பொனொடு காணம் அட்ட சுவை வல்சியினொடு - நல்ல பொன் விளையுங் கழனியும் பட்டும் பஞ்சும் பொன்னும் பழங்காசும் சமைத்த பகற்சோறும் என இவற்றில்; யாதும் ஒழியாமல் ஒட்டி - யாதும் குறையில்லாமல் அறுதியிட்டு; நட்பு பகை உட்கினொடு - தம்மிற் கூடியும் மாறுபட்டும் இவனுக்கு அஞ்சுதலுடனே; உற்றுப் பதினாயிரவர் முயல்கின்றார் - இவ்வேலையிலே கருத்தூன்றிப் பதினாயிரவர் முயல்கின்றனர்.
|
|
(வி - ம்.)பொன் இட்டாற் பொன் விளையுங் கழனி. பொன் உண்டாதற்குக் காரணமான கழனியுமாம். பஞ்சு - துணி. 'ஒடு'யாவும் எண்ணுப் பொருளன. வல்சி - சமணராதலிற் பகலுணவு.
|
( 99 ) |
592 |
வண்டுபடு தேறனற வாய்விடொடு பருகிக் |
|
கண்டதொழிற் கணிச்சிகளிற் கயம்படநன் கிடித்தாங் |
|
கெண்டிசையு மேற்பப்படுத் தேற்றியதன் மேலாற் |
|
கண்டுருகு பொன்னினிலங் காமுறுவ புனைந்தார். |
|
(இ - ள்.) வண்டுபடு தேறல் நறவு வாய்விடொடு பருகி - வண்டுகள் தேடிய தேனையும் மலர்த் தேனையும் ஆரவாரத்துடன் பருகி; தொழில் கண்ட கணிச்சிகளின் கயம்பட நன்கு இடித்து - தொழிலுக் கெனக் கண்ட குந்தாலிகளாலே ஆழமுண்டாக நன்றாக வெட்டி; ஆங்கு எண் திசையும் ஏற்பப் படுத்து ஏற்றி - அவ்விடத்தே எட்டுத்திசையினும் பொருந்தும்படி தலம் இசைத்து உயர்த்தி; அதன் மேலால் கண்டு காமுறுவ உருகு பொன்னின் நிலம் புனைந்தார் - அதன்மேலே இஃது உயரத்திற்கு அளவென்று அறிந்து விரும்புவனவாகிய உருகும் பொன்னாலே நிலத்தை அணிசெய்தார்.
|
|
(வி - ம்.) வாய்விடுதல் - வஞ்சினமும் ஆம். ஒடு: உடனிகழ்ச்சி.
|
|
கணிச்சி - ஈண்டு மண் அகழும் குந்தாலி. காமுறுவ பொன்னின் என மாறுக
|
( 100 ) |
593 |
பொன்செய்குடங் கோத்தனைய |
|
வெருத்திற்பொலி பொற்றூண் |
|
மின்செய் பசும் பொன்னிலத்து |
|
வீறுபெற நாட்டி |
|
மன்பவள மேனவின்று |
|
பளிக்கலகு பரப்பி |
|
நன்செய்வெளி வேய்ந்துசுவர் |
|
தமனியத்தின் அமைத்தார். |
|