பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 344 

மேகத்து மின்போலத் தொலைவில் உள்ளவர்க்குங் காணப்பட்ட இம்மண்டபம் மண்டபங்கட்கெல்லாம் திலகம் என்னுந் தகைமையுடையதாய்; பாய திரை முத்தம் மணல் பரந்து பயின்றுள்ளது - பரவிய அலைகள் தந்த முத்துக்களாகிய மணல் எங்கும் நெருங்கிப் பரவியுள்ளது.

 

   ஆய் - அழகு. கால் - காற்று. வாய் - விளிம்பு. சேயவர் - தொலைவிலிருப்போர். பாய - பரவிய. பயின்று - நெருங்கி.

( 103 )
596 காமர்களி றும்பிடியும் கன்றுங்கலை மானுந்
தாமரைய வாவிகளும் புள்ளுந்தகை நலத்தி
னேமுறுவ பாவையினொ டியக்கிநிலை யெழுதி
யாமொரையம் காண்பவர்க்கி தகம்புறமி தெனவே.

   (இ - ள்.) காமர் களிறும் பிடியும் கன்றும் கலை மானும் தாமரைய வாவிகளும் புள்ளும் - அழகிய களிறும் பெண்யானையும் யானைக் கன்றும் கலையும் பிணையும் தாமரைக் குளங்களும் பறவைகளுமாக; தகை நலத்தின் ஏமுறுவ பாவையினொடு இயக்கி நிலை எழுதி - தக்க அழகினாலே கண்டார் மயங்குதல் உறுவனவாகிய பாவைகளையும் தலைமைத் தெய்வமாகிய இயக்கியின் நிலையையும் பளிக்குச் சுவரிலே எழுதியதால்; காண்பவர்க்கு இது அகம் இது புறம் என ஓர் ஐயம் ஆம் - பார்ப்பவர்க்கு அதன் ஒளியால் இதுதான் உட்புறம் இதுதான் வெளிப்புறம் என உணரமுடியாமல் ஓர் ஐயத்தை உண்டாக்கும்

 

   (வி - ம்.) எழுதி - எழுத: வினையெச்சத்திரிபு. பளிக்குச் சுவராகையால் அவ்வோவியங்கள் உள்ளும் புறமுந் தோன்றின.

( 104 )
597 உழந்தவரு நோக்கி மகிழ் தூங்கவொளி வாய்ந்து
விழுங்குமெனப் பறவைகளும் பிறவிலங்கும் அடையா
முழங்குதிரை வேலியினி னில்லையென மொய்கொண்
டெழுந்துகொடி யாடுமிதவ் வெழில்நகரி னியல்பே.

   (இ - ள்.) உழந்தவரும் நோக்கி மகிழ்தூங்க - பலநாட்பழகிய ஓவியரும் பார்த்து வியந்து மகிழ்ச்சிமிக; ஒளி வாய்ந்து - ஒரு விளக்கம் பொருந்தி; விழுங்கும் எனப் பிற பறவைகளும் விலங்கும் அடையா - (இவ்வோவிய விலங்கும் பறவையும் நம்மை) விழுங்கிவிடும் என (அவற்றைப் பகையாய்க்கொண்ட) பறவைகளும் விலங்குகளும் அடையாவாக; முழங்கு திரை வேலியினின் இல்லை என மொய்கொண்டு எழுந்து கொடி ஆடும் - முழங்கும் கடலை எல்லையாகக் கொண்ட உலகிலே தனக்குவமையில்லையென்பது போலக் கொடிகள் எழுந்து ஆடும்; இது அவ்