பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 345 

எழில் நகரின் இயல்பு - இது அவ்வழகிய மண்டபத்தின் தன்மையாகும்.

 

   (வி - ம்.) உழந்தவர் - ஓவியத் தொழில் பயின்றவர். பிற பறவைகளும் எனவும் கூட்டுக. முழங்குதிரை வேலி - உலகம்.

( 105 )
598 ஓடுமுகில் கீறியொளிர் திங்கள்சிகை வைத்தே
மாடமது வார்சடைய வள்ளலையு மொக்கும்
நாடிமுக நான்கதனி னான்முகனை யொக்கும்
நேடிநிமிர் தன்மையினி னேமியையு மொக்கும்.

   (இ - ள்.) மாடம் அது - மாடமாகிய அது; ஓடும் முகில் கீறி ஒளிர் திங்கள் சிகை வைத்து - ஓடும் மேகத்தைக் கிழித்து விளங்கும் பிறை மதியைத் தலையிலே வைத்தலின்; வார்சடைய வள்ளலையும் ஒக்கும் - நீண்ட சடையினையுடைய சிவபிரானையும் போலும்; முகம் நான்கு அதனின் நாடி நான்முகனை ஒக்கும் - முகம் நான்காகிய அதனாலே எங்கும் நாடு தலால் நான்முகனையும் பொருவும்; நேடி நிமிர் தன்மையினின் நேமியையும் ஒக்கும் - மேலெல்லையைத் தேடி நிமிர் தலாலே திருமாலையும் ஒக்கும்.

 

   (வி - ம்.) நாடி - நாசியென்பாரும் உளர்; இது வீட்டின் ஓருறுப்பு. தன்மையினின் : இன் : அசை.

 

   வார்சடைவள்ளல் - சிவபெருமான். நான்முகன் - பிரமா. நேமி - திருமால்.

( 106 )
599 கண்டவர்கள் காமுறலிற் காமனையு மொக்குங்
கொண்டுலக மேத்தலினக் கொற்றவனை யொக்கும்
வண்டெரிய லாரமுலை மாதர்மகி ழமுதம்
உண்டவர்க ளெவ்வகைய ரவ்வகைய தொன்றே.

   (இ - ள்.) கண்டவர்கள் காமுறலின் காமனையும் ஒக்கும் - பார்த்தவர்கள் விரும்புவதாற் காமனையும் ஒக்கும்; உலகம் கொண்டு ஏத்தலின் அக் கொற்றவனை ஒக்கும் - உலகம் மனங்கொண்டு போற்றுதலால் அந்தச் சச்சந்த மன்னனையும் ஒக்கும்; வண் தெரியல் ஆரம் முலை மாதர் மகிழ் அமுதம் உண்டவர்கள் - செழுவிய மலர்மாலையும் முத்து மாலையும் அணிந்த மங்கையராகிய மகிழூட்டும் அமுதத்தை உண்டவர்கள்; எவ்வகையர் அவ்வகையது ஒன்று - எத்தன்மையரோ அத்தன்மையதாகிய ஒன்றாகும்.

 

   (வி - ம்.) நீங்கலாகாமை கூறினார்.

 

   அக்கொற்றவன் என்புழிச் சுட்டுப் பண்டறி சுட்டு. கொற்றவன் - சச்சந்தன். புணர்ந்தவர் பிரிதலாற்றாமையின்” மாதரமிழ்தம் உண்ட