காந்தருவ தத்தையார் இலம்பகம் |
346 |
|
வர்கள் எவ்வகையர் அவ்வகையது என்றார். மாதர் அமிழ்தம் உண்டவர் பிரியமாட்டாதார் ஆவது போலத் தன்னைக் கண்டோரும் பிரிதற்கியலாத பண்புடையது என்றவாறு.
|
( 107 ) |
600 |
முகிற்றலை மதிய மன்ன முழுமணி மாடத் திட்ட |
|
வகிற்புகை தவழ்ந்து வானத் தருவிசும் பறுத்து நீண்டு |
|
பகற்கதிர்ப் பரப்பிற் றாகிப் பஞ்சவர் விமான முட்டிப் |
|
புகற்கரு மமரர் கற்பம் புக்கயா வுயிர்த்த தன்றே. |
|
(இ - ள்.) மதியம் அன்ன முழுமணி முகில்தலை மாடத்து - திங்கள் அனைய நிறைமணிகளையுடைய, முகிலைத் தலைக்கொண்ட அம் மாடத்திலே; இட்ட அகில் புகை தவழ்ந்து வானத்து அருவிசும்பு அறுத்து - இட்ட அகிற்புகை தவழ்ந்து சென்று வானத்திலே அரிய முகிலை ஊடுருவி; நீண்டு - நீண்டு; பகல் கதிர் பரப்பிற்று ஆகி - பகலைச் செய்யும் கதிரினிடத்தே பரத்தலையுடையதாய்; பஞ்சவர் விமான முட்டி - சோதிட்கரது விமானத்தைத் தொட்டு; புகற்கரும் அமரர் கற்பம் புக்கு - புகுதற்கரியவானவர் இருக்கையினும் புகுந்து; அயாவுயிர்த்தது - இளைப்பாறியது.
|
|
(வி - ம்.) கற்பம் - இருத்தற்குக் கற்பித்த இடம். விசும்பு - இடவாகுபெயர். பஞ்சவர் : ஞாயிறு, திங்கள், மற்றைக் கோள்கள், நாண் மீன்கள், மற்றைத் தாரகைகள் என ஐவகையினர். இவர்கள் சோதிடர் எனவும் சோதிட்கர் என்றுங் கூறப்படுவர்.
|
( 108 ) |
601 |
அரைசன தருளினொ டகன்மனை யவனெய்தி |
|
யுரைசெலல் வகையினொ டுலகமு மறிவுற |
|
முரைசதி ரிமிழிசை முதுநக ரறைகென |
|
விரைசெல லிளையரை வியவரின் விடவே. |
|
(இ - ள்.) அவன் அரைசன் அது அருளினொடு அகல்மனை எய்தி - சீதத்தன் அரசன் அருள்பெற்றுத் தன் பரந்த மனையை அடைந்து; உலகமும் அறிவு உற உரைசெலல் வகையினொடு - உலகமெங்கும் அறியுமாறு இவ் விழா செல்லும் வகையாலே; முதுநகர் அதிர் இமிழ் இசை முரசு அறைக என - இப் பழம் பதியிலே கண் நடுங்குதலால் ஒலிக்கும் இசையுடைய முரசினை அறைக என்று; விரைசெலல் இளையரை வியவரின் விட - கடிது செல்லும் தன் ஏவலிளையரை முரசறைவாரிடம் விடுத்தலால்.
|
|
(வி - ம்.) வியவர் - ஏவல் செய்வார். 'வியங்கோள்' போல. என்றது முரசறைவிப்பாரை. அரைசன், முரைசு : போலி. அதிர் - கண் அதிர்தலால் (கண் : முரசில் அடிபடும் இடம்.)
|
|
இது முதல் மூன்று பாட்டுகள் குளகம்.
|
( 109 ) |