காந்தருவ தத்தையார் இலம்பகம் |
351 |
|
(இ - ள்.) மண் அகம் மடந்தை ஆகம் மார்புஉற முயங்கி நின்ற - நிலமகள் மார்பைத் தன் மார்புறத் தழுவி நின்ற; அண்ணலை ஆதி ஆக அருங்கடி நகரை வாழ்த்தி - கட்டியங்காரனை முதலாக வைத்து அரிய காவலையுடைய நகரத்தை வாழ்த்தி; விண் அகம் முழக்கின் ஏய்ப்ப வீதிதொறும் எருக்கி - முகிலின் முழக்கைப்போலத் தெருத்தொறும் (மேற் கூறியவாறு கூறி) தாக்கி; எங்கும் கண் ஒளிர் கடிப்பின் ஓச்சிக் கடிமுரசு அறைந்த காலை - எங்கும் (முரசின்) கண்ணுற ஒளிசெயும் குறுந்தடியாலே வீசி மணமுரசை அடித்தபோது.
|
|
(வி - ம்.) முரசறைவோன் முதலில் அருகன் அருளை வாழ்த்திப் பிறகு கட்டியங்காரனையும் நகரையும் வாழ்த்தி முற்கூறியவாறு முரசறைந்தான் என்று கொள்க.1.
|
|
அண்ணல் : கட்டியங்காரன். அண்ணல் ”மண்ணக மடந்தை தன் மார்பைப் பொருந்தாளாகவும் வஞ்சனையாலே அவள் தன் மார்பைப் பொருந்துமாறு முயங்கி நின்ற அண்ணல்” எனவும் ஒரு பொருள் தோற்றுதல் காண்க. அரசனை வாழ்த்துதல் முரசறைவோர் வழக்கம். இதனைப் பெருங் கதையில் வாசவதத்தையின் திருமணம் அறிவிக்கும் வள்ளுவன்,
|
|
|
”பொலிக வேல்வலம் புணர்க பூமகள் |
|
|
மலிக மண்மகள் மன்னுக மன்னவன்” |
|
எனத் தொடங்கி முரசறைதலானும் உணர்க. எருக்கி - தாக்கி. கண் - முரசின் கண். கடிப்பு - குறுந்தடி.,
|
( 117 ) |
610 |
வணக்கருந் தானை மன்னர் |
|
மத்தகம் பிளந்து வாய்த்த |
|
நிணக்கொழுங் குருதி வாட்கை |
|
நிலம்புடை பெயர்க்கு மாற்ற |
|
லணைப்பருங் களிகொள் வேழத் |
|
தத்தின புரத்து வேந்தன் |
|
கணைக்கவி னழித்த வுண்கட் |
|
கன்னியைக் கருதி வந்தான். |
|
(இ - ள்.) வணக்க அருந்தானை மன்னர் மத்தகம் பிளந்து - வணங்காத வேந்தரின் யானை மத்தகத்தைப் பிளந்து; வாய்த்த
|
|
|
1. ” இசைபட அறைந்த ஓசை எண்டிசை வேந்து மல்லால்
|
|
விசையுடை யெவரும் ஈண்டி வெறுநிலம் நெளியத் தோற்றிப்
|
|
பசைபடு மாறு வந்தார் பான்மையும் பண்பும் எல்லாம்
|
|
நசைபட நல்ல நாட்டி நாஞ்சிறி துரைத்து மன்றே”
|
|
இச் செய்யுள் சில ஏட்டுப் பிரதிகளிற் காணப்படுகிறது (609) க்குப் பின்.
|
|