காந்தருவ தத்தையார் இலம்பகம் |
352 |
|
நிணம் கொழுங்குருதி வாள்கை - தப்பாத நிணம் பொருந்திய குருதியையுடைய வாளேந்திய கையையும்; நிலம்புடை பெயர்க்கும் ஆற்றல் - நிலத்தைப் புடைபெயர்க்கும் ஆற்றலையும்; அணைப்பருங் களிகொள் வேழத்து - தடுத்தற்கரிய மதமுடைய வேழத்தினையும் உடைய; அத்தினபுரத்து வேந்தன் - அத்தினபுரியின் மன்னன்; கணைகவின் அழித்த உண்கண் கன்னியைக் கருதி வந்தான் - அம்பின் அழகை அழித்த மைதீட்டிய கண்களையுடைய தத்தையை மணக்க நினைத்து வந்தான்.
|
( 118 ) |
611 |
சிதைப்பருஞ் சீற்றத் துப்பின் |
|
செய்கழ னரல வீக்கி |
|
மதக்களி றடர்த்துக் குன்ற |
|
மணிவட்டி னுருட்டு மாற்றற் |
|
கதக்களி யொளிறு வைவேற் |
|
காம்பிலிக் காவல் மன்னன் |
|
பதைப்பரும் பரும யானைப் |
|
பாலமா குமரன் வந்தான். |
|
(இ - ள்.) சிதைப்ப அருஞ் சீற்றத் துப்பின் - பகைவரால் மாற்றற்கரிய வலிமையாலே; செய்கழல் நரல வீக்கி - புனைகழலை ஒலிக்கக் கட்டி; மதக் களிறு அடர்த்து - மதயானையை அடக்கி; குன்றம் மணிவட்டின் உருட்டும் ஆற்றல் - குன்றை அழகிய வட்டினைப்போல உருட்டும் மெய் வலியையும்; ஒளிறு வைவேல் - விளங்கும் கூரிய வேலினையும்; கதக் களி பதைப்பு அரும் பருமயானை - சினக் களியாற் பகைக்கு அஞ்சிப் பதைத்து ஓடுதல் இல்லாத யானையினையும் உடைய;' காம்பிலிக் காவல் மன்னன் பாலகுமரன் வந்தான் - காம்பிலி நாட்டைக் காவல்செய்யும் வேந்தனாகிய பாலகுமரன் வந்தான்.
|
|
வி-ம்.) பால மா குமரன் : மா : இசை நிறைத்தது. 'கதக் களி' என்பதைப் 'பதைப்பரும் பரும யானை' என்பதன் முன் இயைக்க.
|
( 119 ) |
612 |
இலைபொர வெழுதி யன்ன |
|
வெரிமணிக் கடக முன்கைச் |
|
சிலைபொரத் திரண்ட திண்டோட் |
|
சில்லரிச் சிலம்பி னார்த |
|
முலைபொர வுடைந்த தண்டார் |
|
மொய்ம்மதுத் துளிப்ப வந்தான் |
|
மலைபொர வரிய மார்பின் |
|
வாரண வாசி மன்னன். |
|