பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 354 

   (இ - ள்.) வெள் அணி அணிந்த ஞான்றே - பிறந்த நாளின் அணியை அணிந்த போதே; வேந்தர் தம் முடியில் கொண்ட கள் அணி மாலை மோந்து - அரசர்கள் தங்கள் முடியிலே அணிந்த தேனணிந்த மாலையை மோந்து; கனைகழல் இலங்கும் நோன்தாள் - ஒலிக்குங் கழல் விளங்கும் வலிய தாளினையும்; புள் அணி கொடியினானின் - கருடக் கொடியனான திருமாலைப்போல; போர் பல தொலைத்த ஆற்றல் - பல போர்களை வென்ற ஆற்றலையும்; அள் இலை அணிந்த வைவேல் - கூரிய இலை வடிவாக அணிந்த கூரிய வேலையும் உடைய; அயோத்தியர்க்கு இறையும் வந்தான் - அயோத்தி மன்னனும் வந்தான்.

 
615 நீணிதி வணிக ரீறா
  நிலமிசை யவர்க ளெல்லாம்
வீணையிற் பொருது வெல்வான்
  விரைவினர் துவன்றி மூதூர்க்
கோணமு மறுகு மெல்லாங்
  குச்சென நிரைத்தம் மாந்தர்
மாண்மது நசையின் மொய்த்த
  மதுகர வீட்ட மொத்தார்.

   (இ - ள்.) நீள் நிதி வணிகர் ஈறா நிலமிசையவர்கள் எல்லாம் - பெருநிதி பெற்ற செல்வரிறுதியாக நிலமிசை யுள்ளவர்கள் யாவரும்; வீணையின் பொருது வெல்வான் விரைவினர் துவன்றி - தத்தையை வீணையினாலே பொருது வெல்வதற்கு விரைந்து நெருங்கி; மூதூர்க் கோணமும் மறுகும் எல்லாம் குச்சு என நிரைத்து - அப் பழம்பதியின் குறுந்தெருவினும் நெடுந்தெருவினும் பிற இடங்களினும் பரவாற்றியென நிரைத்தலாலே; அம்மாந்தர் மாண் மதுநசையின் மொய்த்த மதுகர ஈட்டம் ஒத்தார் - அம்மக்கள், சிறந்த தேன் விருப்பினாலே மொய்த்த தேனீக்களின் திரளை ஒத்தார்.

 

   (வி - ம்.) இவ்வுவமை, 'மதுகரம் வருந்தத் தேனை ஒருவன் கொண்டுபோவது போல' இவர் வருந்தச் சீவகன் கொண்டுபோதல் கருதிற்று.

( 123 )
616 உருக்கமைந் தெரியுஞ் செம்பொ
  னோரைவில் லகல மாகத்
திருக்குழன் மடந்தை செல்லத்
  திருநிலந் திருத்திப் பின்னர்,