பக்கம் எண் :

காந்தருவ தத்தையார் இலம்பகம் 356 

618 மண்டல நிறைந்த மாசின்
  மதிப்புடை வியாழம் போன்றோர்
குண்டல மிலங்க நின்ற
  கொடியினைக் குறுகித் தோழி
விண்டலர் கோதை விம்மும்
  விரைகுழ றொழுது நீவிப்
பண்டியல் மணங்க ளெல்லாம்
  பரிவறப் பணிந்து சொன்னாள்.

   (இ - ள்.) மண்டலம் நிறைந்த மாசுஇல் மதி புடை வியாழம் போன்று - வட்டம் நிறைந்த குற்றம் அற்ற திங்களின் அருகே வியாழனைப் போன்று; ஓர் குண்டலம் இலங்க நின்ற கொடியினைக் குறுகித்தொழுது (தன் முகத்தருகே) ஒப்பில்லாத குண்டலம் விளங்க நின்ற தத்தையைக் குறுகிநின்று வணங்கி; விண்டு அலர் கோதை விம்மும் விரை குழல் நீவி - விரிந்து மலர்ந்த மாலையின் பொங்கும் மணமுடைய கூந்தலைக் கோதி; பண்டு இயல் மணங்கள் எல்லாம் பரிவு அறப் பணிந்து தோழி சொன்னாள் - பண்டைக் காலத்தே உலகில் நடைபெற்றுவரும் எண்வகை மணங்களையும் வருத்தமின்றி யுணர வணக்கத்துடன் வீணாபதி கூறினாள்.

 

   (வி - ம்.) விரைக்குழல் விரைகுழலென்றாயது விகாரம் :

 

   பண்டியல் மணங்களாவன : - பிரமம், பிரசாபத்தியம், ஆரிடம், தெய்வம், காந்தருவம், ஆசுரம், இராக்கதம். பைசாசம் என்பன. இங்ஙனம் கூறுதல் ஒரு மரபு எனக் கொள்க.

( 126 )
619 எரிமணி நெற்றி வேய்ந்த
  விளம்பிறை யிதுகொ லென்னப்
புரிமணி சுமந்த பொற்பூண்
  பொறுக்கலா நுசுப்பிற் பாவை
திருமணி வீணைக் குன்றத்
  திழிந்ததீம் பாலை நீத்தத்
தருமுடி யரச ராழ்வ
  ரம்மனை யறிவ லென்றாள்.

   (இ - ள்.) எரிமணி நெற்றி வேய்ந்த இளம்பிறை இது கொல் என்னப் புரிமணி சுமந்த பொன்பூண் - 'ஒளிவிடும் மணியை இருதலையினும் அழுத்தியதொரு பிறையோ இது?' என்னுமாறு முத்து வடங்கள் இருதலையினு மணியைச் சுமந்த பொற்பூணினை; பொறுக்கலா நுசுப்பின் பாவை - பொறுக்க